fuel cell


நாம் இதுவரை எரிமக் கலனில் 2 H2 + O2--> 2 H2O என்ற வகையான வினைகளை மட்டும் பார்த்தோம். இதில் ஹைட்ரஜன் ‘எரிந்து' தண்ணீர் வெளிவருகிறது. மாசு எதுவும் வராது. பெரும்பாலும் இந்த தண்ணீருக்கு குறிப்பிட்டு பயன் என்று இருக்காது. விண்வெளி கலங்களில் (அப்பல்லோ / Apollo போன்ற விண்கலங்களில்) இப்படி வரும் தண்ணீர், விண்வெளி வீரர்கள் குடிக்கப் பயன்பட்டது.


எப்படி ஹைட்ரஜனுக்கு பதில் மெத்தனால் போன்ற பொருள்களையும் எரிபொருளாக பயன்படுத்தலாமோ, அதைப் போலவே ஆக்சிஜனுக்கு பதிலாக வேறு பொருளையும் பயன்படுத்தலாம்.

உதாரணமாக,

  • H2 + Cl2 --> 2 HCl 
  • C2H2 --> C2H2Cl2

    இங்கு HCl அல்லது C2H2Cl2 என்பது வினையின் முடிவில் கிடைக்கிறது. எனவே, எரிமக்கலனை மின்சாரம் எடுப்பதைத் தவிர, புதுப் பொருளைத் தயாரிக்கும் (synthesis) கலனாகவும் பயன்படுத்தலாம்.


தற்போது அம்மோனியா (NH3) தயாரிக்க ஹேபர் முறை (Haber Process) உபயோகத்தில் உள்ளது. இது மிக அதிக அழுத்தத்திலும் (100 atmosphere) வெப்ப நிலையிலும் (500 டிகிரி செல்சியஸ்) நடைபெறும். இந்த வினை


N2 + 3 H2 --> 2 NH3

என்று இருக்கும். இவ்வினையில் ஆற்றல் வெப்பமாக வெளிப்படும்.

இதையே எரிமக்கலன் வழியே செய்ய ஆராய்சி நடந்துகொண்டு இருக்கிறது. அவ்வாறு செய்ய முடிந்தால், பெருமளவு லாபம் கிடைக்கும். தற்போது இருக்கும் ஹேபர் முறையில் அதிக அழுத்தம் மற்றும் வெப்பத்தில் அம்மோனியாவை தயாரிக்க செலவும் அதிகமாக இருக்கின்றது. எரிமக் கலனில் சாதாரண அழுத்தம் மற்றும் வெப்ப நிலையில் தயாரிக்க முடிந்தால், செலவு குறைவாக இருக்கும். அம்மோனியா உரங்கள் தயாரிக்க தேவைப்படுகிறது. நமது நாட்டில் பெருமளவு அம்மோனியா தயாரிக்கப்படுகிறது. எரிமக்கலனில் தயாரிக்க முடிந்தால், பெரிய அளவில் மின்சாரமும் கிடைக்கும்!.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்