oru naal oru kanavu

ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது வானவில்லில் நடந்து சென்று சிரித்திருக்கும் நட்சத்திர பூ பறித்தோம் வெள்ளி பிறை படகெடுத்து ஆகாய கங்கை அலைகளில் துள்ளி குதித்தோம் நீச்சலடித்திட ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது நதியோரம் நதியோரம் என்னை சுற்றி பறந்தது கிளி கூட்டம் கிளிகூட்டம் கிளிகூட்டம் வந்ததேனில் நீயொரு பழத்தோட்டம் பறக்கும் கிளிகளிலே ஒரு கிளி உன்னை போல் உருவெடுக்க கிளியே உனக்காக நானும் கிளி போல் அவதரிக்க ரெக்கைகள் கொண்டு வா விண்ணிலே பறப்போம் உள்ளங்கள் கலப்போம் வண்ணம் சூடும் வண்ணகிளி ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது எதனாலே வெண்ணிலவே அவள் போல் நீயும் இளைத்தாயோ உன் மனதை உன் மனதை எனைப்போல் எவருக்கும் கொடுத்தாயோ ஹோ ஒளி விடும் முகத்தினிலே கறை ஏன் முத்த அடையாளங்களோ இரவில் விழித்திருந்து நீ தான் கற்றதென்ன பாடங்களோ மின்னிடும் கண்ணிலே என்னவோ உள்ளதே சொல்லம்மா சொல்லம்மா நெஞ்சில் ஆடும் மின்னல் கொடி ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது வானவில்லில் நடந்து சென்று சிரித்திருக்கும் நட்சத்திர பூ பறிப்போம் வெள்ளி பிறை படகெடுத்து ஆகாய கங்கை அலைகளில் துள்ளி குதித்தோம் நீச்சலடித்திட ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்