சோலைக் குயிலே காலைக் கதிரே

 ✨✨✨✨✨✨✨✨

படம் : பொண்ணு ஊருக்கு புதுசு

பாடியவர் : ஷைலஜா

வரிகள் : 

எம்ஜி . வல்லபன்

ஆண்டு:1979

✨✨✨✨✨✨✨✨

சோலைக் குயிலே

காலைக் கதிரே

அள்ளும் அழகே

துள்ளும் ராகமே

துள்ளும் ராகமே


சோலைக் குயிலே

காலைக் கதிரே

அள்ளும் அழகே

துள்ளும் ராகமே

துள்ளும் ராகமே


வண்ண தேன் கழனி காலைக்கு

வாழ்த்து பாடுதே

சின்ன பூங்குருவி நாளைக்கும்

சேர்த்து தேடுதே

அசைவில் இசையில் கன்னித் தமிழே


வாடையில் ஆடிடும் கோடையின் நீரலை

மேடையின் மீது கண்ணாலே கவி பாடி

பொன் வண்ண மீனாடுதே ஓஓஓஓஒ


சோலைக் குயிலே

காலைக் கதிரே

அள்ளும் அழகே

துள்ளும் ராகமே

துள்ளும் ராகமே


முல்லை மாலைகளை

சூடிடும் வெள்ளி மேகங்கள்


நெல்லுப் பானைகளை

சுமக்கும் கன்னி கோலங்கள்

அசைவில் இசையில் கன்னித் தமிழே


செங்கதிர் சிந்திடும் சித்திரை பங்குனி

திங்களில் நாளில் மந்தாரை செந்தாழம்

வந்தாடும் ஊர்கோலமே ஓஓஓஓஒ


சோலைக் குயிலே

காலைக் கதிரே

அள்ளும் அழகே

துள்ளும் ராகமே

துள்ளும் ராகமே ...

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்