ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல்
✨✨✨✨✨✨✨✨✨
படம்:மனம் விரும்புதே உன்னை
ஆண்டு:1999
வரிகள்:வாலி
இசை:இளையராஜா
பாடியவர்கள்:
ஹரிஹரன், சுஜாதா
✨
குழு: லலலலலலலல...
✨
பெண்:
ஓஹோ ஓஹோ ஓ..
ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல்
எங்கோ எங்கோ தேடிப் பார்க்கும் கண்கள்
என்ன காரணம் ஓஹோ யாரைக் கேட்பதோ ஒஹோ
காதல் செய்யும் மாய லீலை இது தானோ
✨
ஆண்: ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல் எங்கோ எங்கோ
தேடிப் பார்க்கும் கண்கள்
✨
ஆண்: மாலைப் பொழுதும் வீசும் வாடைக் காற்றும் சொல்வதென்னவோ காதல் ராகம் தானா ஸ்வரங்களின் அபிநயம் அது ஒரு புது சுகம்
✨
பெண்: ஆற்றின் அலையும் ஆடும் வாசப் பூவும்
கேட்பதென்னவோ காதல் ராகம் தானா
இது ஒரு அனுபவம் இசை என்னும் அதிசயம்
✨
ஆண்: நானாகவே நானில்லையே நானாகவே நானில்லையே
✨
பெண்: என்னவென்று நான் சொல்ல
இன்னும் என்ன நான் சொல்ல
வா வா அன்பே வா
✨
ஆண்: ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல் எங்கோ எங்கோ தேடிப் பார்க்கும் கண்கள்
✨
குழு: ..........
✨
பெண்: உன்னை நினைத்தே
மீட்டும் வீணை ஏங்கும்
வீணை மடியில் காதல் ராகம் தூங்கும் உறவென நீ இரு
ஒரு கணம் விரல் தொடு
✨
ஆண்: எண்ணத் திரையில் வண்ணக் கோலம் போடு
வண்ணக் கனவில் வந்து விளையாடு
சுகம் என்னும் அலை வரும்
இளமையும் வலையிடும்
✨
பெண்: பார்க்காதது கேட்காதது வேறெங்கிலும் காணாதது
✨
ஆண்: காதல் மேடையில் இங்கே
காண வேண்டுமே இன்றே
வா வா அன்பே வா
✨
பெண்: ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல்
✨
ஆண்: எங்கோ எங்கோ தேடிப் பார்க்கும் கண்கள்
✨
பெண்: என்ன காரணம் ஓஹோ
யாரைக் கேட்பதோ ஒஹோ
✨
ஆண்: காதல் செய்யும் மாய லீலை இது தானோ
✨
பெண்: ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல்
✨
ஆண்: எங்கோ எங்கோ தேடிப் பார்க்கும் கண்கள்
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக