ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ,
✨✨✨✨✨✨✨✨✨
படம் :பார்த்திபன் கனவு
ஆண்டு: 2003
இசை: வித்தியாசாகர் பாடியவர்கள்: ஹரிணி ஸ்ரீகாந்த்
வரிகள் :கபிலன்
✨✨✨✨✨✨✨✨✨
என்ன தவம் செய்தனை யசோதா?
என்ன தவம் செய்தனை யசோதா?
எங்கும் நிறை பரப்பிரம்மம், அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா?
✨
ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ,
யாவும் இசை ஆகுமடா கண்ணா!
✨
ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ,
யாவும் இசை ஆகுமடா கண்ணா!
✨
ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும் காதல் இசை கண்ணா!
✨
ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ,
யாவும் இசை ஆகுமடா கண்ணா!
கண்ணா! கண்ணா! கண்ணா!
✨
செல்ஃபோன்-
இசைக்குயில் நம்மை அழைத்திடும் போது,
தொலைவிலும் வாழ்ந்தாலும் தொடுவோம் நாமே.
✨
சிகரெட்-
விரல்களின் இடையே ஒரு விரல் போல,
சில நொடி வாழ்கின்ற ஆறாம் விரல்.
✨
ஓகே… அ… ஆ… வெட்கம்-
இது பெண்மை பேசிடும் முதல் ஆசை வார்த்தைதான்.
✨
மீசை-
இது எனக்கு மட்டும் சொந்தமாகும் கூந்தல் குழந்தைதான்.
✨
ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும் காதல் இசை கண்ணா!
✨
திருக்குறள்-
இருவரிக் கவிதை ஒரு பொருள் தருமே,
இருவரும் இது போல இருந்தால் சுகம்.
✨
நிலா-
இரவினில் குளிக்கும் தேவதை இவளோ,
வளர்ந்தே தேய்கின்ற வெள்ளை நிழல்.
✨
சரி, கண்ணாடி-
இதில் என்னைப் பார்க்கிறேன், அது உன்னைக் காட்டுதே!
✨
ம்… காதல்
கரி நிச ரிக ரிக ரிக ம்ம் ம்ம் ம்ம் ம்…
நம் நான்கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றைக் கனவுதான்!
✨
வாவ், பியூட்டிஃபுல்…
ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும் காதல் இசை கண்ணா!
✨
ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ,
யாவும் இசை ஆகுமடா கண்ணா!
✨
என்ன தவம் செய்தனை யசோதா?
எங்கும் நிறை பரப்பிரம்மம், அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை?
என்ன தவம் செய்தனை?
என்ன தவம் செய்தனை, யசோதா?
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக