பாடல்: தாயே மாமதுரை என் மனமே
✨✨✨✨✨✨✨✨✨
பாடல்: தாயே மாமதுரை என் மனமே
வரிகள்:நிரஞ்சன் பாரதி
இசை:க்ரிஷ்
பாடியவர் :வினயா
✨✨✨✨✨✨✨✨✨
✨✨✨✨✨✨✨✨✨
உத்யத்பானு சஹஸ்ரகோடி ஸத்ருசாம்
கேயூர ஹாரோஜ்வலாம்
பிம்போஷ்டீம் ஸ்மிததங்க்த பங்க்தி ருசிராம்
பீதாம்பராலங்க்ருதாம்
விஷ்ணு ப்ரம்ஹ சுரேந்த்ர ஸேவித பதாம்
தத்வ ஸ்வரூபாம் சிவாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம்
காருண்யவாராம் நிதிம்
✨✨✨✨✨✨✨✨✨
✨✨✨✨✨✨✨✨✨
தாயே மாமதுரை என் மனமே
அன்பாலே எனை ஆள்வாய் தினமே
தாயே மாமதுரை என் மனமே
அன்பாலே எனை ஆள்வாய் தினமே
ஆட்சி என்றால் மீனாட்சி
என் மனதில் அவள் காட்சி
மீனினம் தாவிடும் இரண்டு கண்ணுடையாளே
காத்திடும் தெய்வம் யாருனைப் போலே
✨
தாவிடும் இரண்டு கண்ணுடையாளே
காத்திடும் தெய்வம் யாருனைப் போலே
✨
தாயே மாமதுரை என் மனமே
ஆட்சி என்றால் மீனாட்சி
✨
என் குரல் கேளாய் நீ எதிர் வாராய்
ஒர் வரம் தாராய் முதலும் நீ
✨
என் குரல் கேளாய் நீ எதிர் வாராய்
ஒர் வரம் தாராய் முதலும் நீ
✨
வானகம் வேண்டாம் வையகம் வேண்டாம்
உன்னருள் வேண்டும்
சகலமும் நீ
✨
காண்பவள் நீயடி
காண்பதும் நீயடி
காட்சியும் நீயடி
அகிலம் நீ
✨
காண்பவள் நீயடி
காண்பதும் நீயடி
காட்சியும் நீயடி
அகிலம் நீ
✨
உன் எழில் கண்டு
ஆனந்தம் கொண்டு
நான் எனும் எண்ணம்
நொறுங்குதே
✨
உன் எழில் கண்டு
ஆனந்தம் கொண்டு
நான் எனும் எண்ணம்
நொறுங்குதே
✨
செந்தமிழ்ச் செல்வி மதுரை மீனாட்சி
ஆசைகள் யாவும் அடங்குதே
✨
ஓருயிர் தன்னிலும்
ஊனுடல் தன்னிலும்
அன்பெனும் சாகரம் ததும்புதே
✨
ஓருயிர் தன்னிலும்
ஊனுடல் தன்னிலும்
அன்பெனும் சாகரம் ததும்புதே
✨
மீனாட்சி உனை நான் தினம் பாட
என்னுள்ளே உனை நான் தினம் தேட
மரகதவல்லி என் தாயே
மறவாய் அருள் தருவாயே
✨
மீனினம் தாவிடும் இரண்டு கண்ணுடையாளே
காத்திடும் தெய்வம் யாருனைப் போலே
✨
தாவிடும் இரண்டு கண்ணுடையாளே
காத்திடும் தெய்வம் யாருனைப் போலே
✨
தாயே மாமதுரை என் மனமே
ஆட்சி என்றால் மீனாட்சி
✨✨✨✨✨✨✨✨✨
✨✨✨✨✨✨✨✨✨
*உத்யத்பானு சஹஸ்ரகோடி சத்ருசாம்* - ஆயிரம் கோடி உதயசூரியனின் ஒளிக்கு ஈடான ஒளியை உடையவளும்,
*கேயூர ஹாரோஸ்வலாம்* - வளையல்கள், மாலைகள் போன்ற அணிகளால் ஒளிவீசுபவளும் *பிம்போஷ்டீம்*- கோவைப்பழங்கள் போன்ற இதழ்களை உடையவளும்
*ஸ்மித தங்க்த பங்க்தி ருசிராம்* - புன்னகை புரியும் பல்வரிசைகள் உடையவளும் *பீதாம்பராலங்க்ருதாம்* - பொன் பட்டாடைகளால் அழகு பெற்றவளும்
*விஷ்ணு ப்ரஹ்ம சுரேந்த்ர ஸேவித பதாம்* - திருமால், பிரமன், தேவர் தலைவன் போன்றவர்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவளும்
*தத்வ ஸ்வரூபாம்*- உண்மைப் பொருளானவளும் *சிவாம்* - மங்கள வடிவானவளும் *காருண்யவாராம்* - கருணைக்கடல் ஆனவளும்
*நிதிம்* - பெரும் செல்வம் ஆனவளும் ஆன
*மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம்* - மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.
(மீனாட்சி பஞ்சரத்ன வரிகள்)
✨✨✨✨✨
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக