ஹனூமத் பஞ்சரத்னம் -ஆதிசங்கரர்
✨✨✨✨✨✨✨✨✨
ஹனூமத் பஞ்சரத்னம்
-ஆதிசங்கரர்
✨✨✨✨✨✨✨✨✨
1.தாகில விஷயேச்சம் ஜாதானந்தாச்ரு புலகமத்யச்சம்
ஸீதாபதிதூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்
✨
உலக விஷயங்கள்
அனைத்திலும் விருப்பல்லாதவர், ஆனந்தக் கண்ணீர் பெருக்கும் ரோமாஞ்சமும் கொண்டு அகத் தூய்மையுள்ளவர். ஸீதாபதியான ஸ்ரீராமரின் முதல் தூதனவர், இனியவர், அப்படிப்பட்ட வாதாத்மஜரான ஹனுமனை தியானிக்கிறேன்.
✨
2.தருணாருண முககமலம் கருணாரசபூர பூரிதாபாங்கம்
ஸஞ்ஜீவனமாசாஸே மஞ்ஜுளமஹிமான மஞ்ஜனாபாக்யம்
✨
இளம் சூரியனை ஒத்த சிவந்த முகமுள்ளவர், கருணைததும்பும் கடைக்கண்கள் கொண்டவர், உயிர்நாடியைத் தூண்டும் பெரும் பெருமையுடையவர். அவர் அஞ்ஜனாதேவியின் அதிர்ஷ்டமான அருமைப்புதல்வர். அவரை வாழ்த்துகிறேன்.
✨
3.சம்பரவைரிசராதிக மம்புஜதலவிபுல
லோசனோதாரம்
கம்புகல மனிலதிஷ்டம் பிம்பஜ்வாலிதோஷ்டமேக மவலம்பே
✨
மன்மதபாணத்தையும் விஞ்சியவர், தாமரை இதழ் போன்று மலர்ச்சிபெற்ற கண்கள் கொண்டவர். சங்கு போன்ற கழுத்தும், கொவ்வைப்பழ மெனத்
திகழும் உதடும் கொண்ட வாயு புத்திரரான ஹனுமனை ஆச்ரயிக்கிறேன்.
✨
4.தூரிக்ருதஸீதார்தி: ப்ரகடீக்ருத ராமவைபவஸ்பூர்தி:
தாரித தசமுக கீர்தி:புரதோ மம பாது ஹனுமதோ மூர்தி :
✨
ஸீதையின் துன்பத்தை விலக்கியவர், ஸ்ரீராமரின் வைபவத்தை உலகறியச் செய்தவர், ராவணனின் புகழை கிழித்தெறிந்தவர், அப்படிப்பட்ட ஹனுமனின் மூர்த்தி என்னெதிரே பளிச்சிடுகிறது.
✨
5.வானர நிகராத்யக்ஷம் தானவகுல குமுத ரவிகரஸத்சத்ருக்ஷம்
தீன ஜனாவன தீக்ஷம் பவனதப: பாக புஞ்ஜ மத்ராக்ஷம்
✨
வானரக் கூட்டத்தின் தலைவர், ராக்ஷஸ குலமாகிய அல்லிப் பூக்களுக்கு சூர்ய கிரணம் போன்றவர், எளிய ஜனங்களைக் காக்கும் வ்ரதம் கொண்டவர். வாயு தேவன் செய்த தவத்தின் திறன் போன்றவர்- அந்த ஹனுமனை கணடுகொண்டேன்.
✨
6.ஏதத் பவனஸுதஸ்யஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்
சிரஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீராம பக்திபாக்பவதி
✨
இந்த ஹனுமனின் பஞ்சரத்னம் என்ற ஸ்தோத்ரத்தைப் படிப்பவர் இவ்வுலகில் அனைத்து ஸுகபோகங்களையும் அனுபவித்துப் பின் ஸ்ரீராம பக்தி செய்பவராக ஆவர்.
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக