ஹேய் மின்னலே ஹே மின்னலே என் கண்ணிலே நெஞ்சிலே சொல்லொனா கன்னலே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:அமரன்

ஆண்டு:2024

பாடகர்கள் : ஹரி சரண் மற்றும் ஸ்வேதா மோகன்

இசை : ஜி. வி. பிரகாஷ்குமார்

பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : ஹேய் மின்னலே ஹே மின்னலே

என் கண்ணிலே நெஞ்சிலே

சொல்லொனா கன்னலே

பெண் : சக்கரே என் சக்கரே

மெல்மெல்லமாய் செல்லமாய்

கொஞ்சுதே மௌனமே

ஆண் : சிநேகமோ……பிரேமமோ……

ஈடிலா நேயமோ

பேரிலா மாயமோ

கேள்வியே சுகமோ…..

பெண் : யாவுமே மாறுதே

பூமிதான் இதுவோ

சக்கரே……சக்கரே……சக்கரே……

ஆண் : கரைமீதிலே இரு பாதமாய்

வா வாழலாம் வாழலாம்

மௌனமாய் தேடலாம்

பெண் : கடல் மீதிலே

விழும் தூறலாய்

நாம் தூறலாம்

தூறியே தீரலாம்

ஆண் : இருள் இருள் பூசிய நெடுஞ்சாலையில்

ஒலி போல் சிரிப்பால்

விரல் விரல் சூடிய

நறும்பூவென விரலை பிடிப்பாய்

பெண் : சிறு குடை மீறிய

மழை போலவே நாள் போகுதே

பெரும் வரம் வாங்கிய

தவம் போலவே வாழ்வானதே

ஆண் : ஹேய் மின்னலே ஹே மின்னலே

என் கண்ணிலே நெஞ்சிலே

சொல்லொனா கன்னலே

பெண் : என் உள்ளிலே என் உள்ளிலே

மெல்மெல்லமாய் செல்லமாய்

கொஞ்சுதே மௌனமே

ஆண் : சிநேகமோ……பிரேமமோ……

ஈடிலா நேயமோ

பேரிலா மாயமோ

கேள்வியே சுகமோ…..

பெண் : யாவுமே மாறுதே

பூமிதான் இதுவோ

சக்கரே……சக்கரே……சக்கரே……

ஆண் : …………ஊஊஊஊ....

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்