ஆகாச நிலவுதான் அழகாத் தெரியல
✨✨✨✨✨✨✨✨
தந்தை பிள்ளை மீது வைத்திருக்கும் கனவு இப்பாடல்.
✨✨✨✨✨✨✨✨
படம் : 'மஞ்சப்பை' பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், இசை: என்.ஆர். ரகுநந்தன்
வரிகள் :யுகபாரதி
✨✨✨✨✨✨✨✨
பல்லவி:
ஆகாச நிலவுதான் அழகாத் தெரியல
ஆணிமுத்து அதுவுமே அழகாத் தெரியல
✨
உன்னைப் போல அழகுதான்
ஒண்ணுமில்ல உலகிலே
✨
ஒட்டுமொத்த அழகையும்
கொண்ட நீயும்உசுரிலே...
சாமி கொடுத்த வரமே நீதானே எனக்கு ராசா
✨
நிண்டு வாழ்ந்து காட்ட வேணும்
இந்த புவியில் ரொம்ப பெருசா
✨
ஆகாச நிலவுதான் அழகாத் தெரியல..
✨✨
சரணம் 1:
சூரியனை கேளு வாங்கி நான் தருவேன்
✨
சந்திரனை கேளு கொண்டு நான் வருவேன்
✨
வங்கக் கடலை நீ சின்னக் குவளையில்
மொண்டு வரச்சொல்லு செஞ்சிடுவேன்
✨
சிங்கம் சிறுத்தையை ஒத்த அடியில
கொன்னு வரச்சொல்லு
செஞ்சிடுவேன்
✨
உலகே அழிஞ்சாலும் உன்ன நான் காத்திடுவேன்
✨
என்னோட பெருமை என்ன உன் உருவில் பார்த்திடுவேன்
✨
ஆகாச நிலவு தான்.....
✨
எப்போவுமே நீ தான் என்னோட ஆவி
✨
பட்டம் பல வாங்கி ஆகணும் மேதாவி
✨
உன்னைவிட ஒரு சொத்து சொகம் இந்த மண்ணில் இல்லையின்னு சொல்லிடுவேன்
✨
கண்ணு மணி என ஒன்ன நினைச்சு நான் கையில் எடுத்து தான் கொஞ்சிடுவேன்
✨
எதையும் உனக்காக சுளுவா செஞ்சிடுவேன்
✨
ஒத்த நொடி பிரிய சொன்னா இறந்தே போயிடுவேன்
✨
ஆகாச நிலவுதான் அழகாத் தெரியல
ஆணிமுத்து அதுவுமே அழகாத் தெரியல
✨
உன்னைப் போல அழகுதான்
ஒண்ணுமில்ல உலகிலே
✨
ஒட்டுமொத்த அழகையும்
கொண்ட நீயும் உசுரிலே...
✨
சாமி கொடுத்த வரமே நீதானே எனக்கு ராசா
✨
நிண்டு வாழ்ந்து காட்ட வேணும்
இந்த புவியில் ரொம்ப பெருசா
✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக