நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச

 ✨✨✨✨✨✨✨✨

படம்:சுந்தர பாண்டியன்

ஆண்டு:2012

இசை: N.R.ரகுநந்தன்

வரிகள்:தாமரை

பாடியவர்:சைந்தவி

✨✨✨✨✨✨✨✨

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச

அட உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச

எனக்காக வந்தவனே இளநெஞ்சில் நின்னாயே

உசுர் கூட துச்சமுன்னு சொல்லாமல் சொன்னாயே

என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட

ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச

உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச

எனக்காக வந்தவனே இளநெஞ்சில் நின்னாயே

உசுர் கூட துச்சமுன்னு சொல்லாமல் சொன்னாயே

என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட

ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட

ஆத்து வெள்ளம் நீ என்றால் ஆடும் தோணி நானே

ஆட விட்டு அக்கரையில் கொண்டு சேர்ப்பாயே

பட்டாம்பூச்சி நான் என்றால் எட்டு திசை நீயே

எந்த பக்கம் போனால் என்ன நீதான் நிப்பாயே

மெட்டி வாங்கி தர சொல்லி குட்டி விரல் கூத்தாட

பட்டு சேல பல நூறு பாழா கிடக்கு

பக்கத்துல நான் தூங்க பத்துமடை பாய் வாங்க

நித்தம் நித்தம் நான் ஏங்க நாளும் போகுது

என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட

ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச

உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச

முள்ளு தச்ச காயத்த முத்தம் இட்டு ஆத்த

பத்து ஊரு தாண்டி வந்து பக்கம் நிப்பாயே

பட்ட பகல் என்றாலும் பித்தம் தலைக்கேறும்

என்னை சீண்டி ஏதோ ஏதோ பேச வைப்பாயே

பத்து தல பாம்பாக வட்டமிடும் என் ஆச

மொட்டு போல முகம் கூப்பி உள்ளம் மறைப்பேன்

நெஞ்சுக்குழி மேலாட தாலி கொடி நான் தேட

மஞ்சத்தண்ணி நீரோட எப்போ வருவ

என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட

ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச

உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச

எனக்காக வந்தவனே இளநெஞ்சில் நின்னாயே

உசுர் கூட துச்சமுன்னு சொல்லாமல் சொன்னாயே

என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட

ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்