புது புது பூக்கள் நமக்காக பறவைகள்
✨✨✨✨✨✨✨✨✨
படம்:ஜீன்.R
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் உஷா உதுப்
இசையமைப்பாளர் :
ஷரத்
✨✨✨✨✨✨✨✨✨
குழு : ஜூன்….ஜூன்….ஜூன்….ஜூன்….
பெண் : புது புது பூக்கள்
நமக்காக பறவைகள்
இசைத்திடும் பாடல்
நமக்காக உலகத்தில்
இருக்கிற யாவும் நமக்காக
உறவுகளாலே
✨
பெண் : அழகிய வானம்
இன்றைக்கு புதியது
பழையது கண்கள்
நம் பார்வை புதியது
உள்ளத்தில் ஓடும் எண்ணங்கள்
புதியதுதானே
✨
பெண் : அதிகாலை பூவாசம்
தக்க தீம்த த த ஜம்
தாலாட்டு நீ பாட
தாய்மையும் தூங்கும்
✨
பெண் : ஹ்ம்ம்…அழகான மா கோலம்
தக்க தீம்த த த ஜம்
மனதோடு சந்தோஷம்
மாநாடு போடும்
✨
பெண் : வழி தோறும் விண்மீன்கள்
✨
பெண் : நிலவெரியும் இரவிலே
கதைகள் கலந்து சோற் ஊட்டவா
வகிடெடுக்கும் விரல்களே
தலையின் விதியை நீ மாற்றவா
✨
பெண் : சில நிமிடம் எனக்கு நீ
மடியில் தவழும் பெண் அல்லவா
சில பொழுதில் எனக்கு நீ
குமரி வயதில் தாய் அல்லவா
✨
பெண் : மழை நீரில் நனைத்ததால்
என்னை நீ திட்டினாய்
பாசத்தால் உருகியே
கண் நனைகிறேன்
✨
பெண் : என்னுள் நீ வாழ்கிறாய்
என் பிம்பம் போலவே
ஏனோ என் மார்பிலே
பால் சுரக்குதே
✨
பெண் : இறைவன் எழுதும் கவிதை
உறவு என்றால் ஒன்றும் பொய் இல்லை
✨
பெண் : புது புது பூக்கள்
நமக்காக பறவைகள்
இசைத்திடும் பாடல்
நமக்காக உலகத்தில்
இருக்கிற யாவும் நமக்காக
உறவுகளாலே
✨
பெண் : அழகிய வானம்
இன்றைக்கு புதியது
பழையது கண்கள்
நம் பார்வை புதியது
உள்ளத்தில் ஓடும் எண்ணங்கள்
புதியது தானே
✨
பெண் : அடடடா உன் குறும்பிலே
உனது ரசிகை நான் ஆகிறேன்
அழகிய உன் பொய் எல்லாம்
உறங்கும் வரையில் நான் தாங்குவேன்
✨
பெண் : கருவறையின் அமைதியை
உனது மடியில் நான் தேடினேன்
கடவுள் இங்கே இருப்பதாய்
உனது உறவில்தான் நம்பினேன்
✨
பெண் : தேனை கூடாக்கியே
தேனீக்கள் வாழுதே
அன்பை கூடாக்கியே
நாம் வாழலாம்
✨
பெண் : காற்று போகும் வழி மேகங்கள் போகுதே
அன்பின் பாதைகளில்
நாம் போகலாம்
✨
பெண் : இறைவன் எழுதும் கவிதை
உறவு என்றால் ஒன்றும் பொய் இல்லை
✨
பெண் : புது புது பூக்கள்
நமக்காக பறவைகள்
இசைத்திடும் பாடல்
நமக்காக உலகத்தில்
இருக்கிற யாவும் நமக்காக
உறவுகளாலே
✨
பெண் : அழகிய வானம்
இன்றைக்கு புதியது
பழையது கண்கள்
நம் பார்வை புதியது
உள்ளத்தில் ஓடும் எண்ணங்கள்
புதியது தானே
✨
பெண் : அதிகாலை பூவாசம்
தக்க தீம்த த த ஜம்
தாலாட்டு நீ பாட
தாய்மையும் தூங்கும்
✨
பெண் : ஹ்ம்ம்…அழகான மா கோலம்
தக்க தீம்த த த ஜம்
மனதோடு சந்தோசம்
மாநாடு போடும்
பெண் : வழி தோறும் விண்மீன்கள்…
✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக