தேவர்கள் தித்திக்க நாமெல்லாம் சிந்திக்க
✨✨✨✨✨✨✨✨
படம்:ஸ்ரீராம ராஜ்ஜியம்
இசை:இளையராஜா
பாடியவர்கள்: சித்ரா சின்மயி
வரிகள்: பிறைசூடன்
✨✨✨✨✨✨✨✨
தேவர்கள் தித்திக்க நாமெல்லாம் சிந்திக்க வேதங்கள் அர்ச்சிக்கும் சீதாராமன் கதை புதிது சுகம் இனிது அதன் மகிமை மிக பெரிது
✨
சொல்லெல்லாம் கற்கண்டு சொல்லுக்குள் தேனுண்டு நாம் சொல்ல நலமுண்டு
சீதாராமன் கதை புதிது சுகம் இனிது அதன் மகிமை மிக பெரிது
✨
வீடெங்கும் மனசாந்தி
தருமோர் நிதி
மகிழ்வென்ற வழியேந்தி வருமோர் விதி
அரிதாகிய உலகை அறிவுறுத்தும் கதை இதுவே
✨
தேவர்கள் தித்திக்க நாமெல்லாம் சிந்திக்க வேதங்கள் அர்ச்சிக்கும் சீதாராமன் கதை புதிது சுகம் இனிது அதன் மகிமை மிக பெரிது
✨
அயோத்தி ஆளும் தசரத ராஜன் அவரின் குலவதிகள் குணவதிகள் மூன்று பேர்
புத்திரகாம யாகம் செய்தார் ராஜன் ராணி கௌசல்யா, சுமித்ரா, கைகேயி உடன்
அழகென தோன்றினார் நான்கென புத்ரர்கள் ராம, லட்சுமண, பரத சத்ருகன் மைந்தர்கள்
ரகுவம்சமே தழைக்க அதில் புவியன்பினில் திளைக்க
✨
தேவர்கள் தித்திக்க நாமெல்லாம் சிந்திக்க வேதங்கள் அர்ச்சிக்கும் சீதாராமன் கதை புதிது சுகம் இனிது அதன் மகிமை மிக பெரிது
✨
தசரத மாமன்னன்
இளம் ராமனின் அன்பிலே
கௌசிக மாமுனி ஏன் வந்தார் இடையிலே
தன் யாகமே காப்பாற்றவே ராமனை அம்பாக்கினார்
மிக மந்திர அஸ்த்ரங்களை உபதேசம் செய்தே
ராமனே தீரனாய் தாடகியை கொன்றார்
யாகமே வெல்லவே கௌசிக முனி மகிழ்ந்தார்
ஜெயராமனின்
பணிவுணர்வொலி
மிதிலாபுரிக்கேகி
✨
சிவதனுசங்கே மதுமலர் இங்கே ரகுராமனின் வீரம் அபயம் அது அதுவோ
சந்திர வதனம் தீண்டிய மௌனம் நகைத்தால் மனம் விளங்கும் விஷயம்
அது அதுவே
✨
வில்லினை வளைக்கும் மோகன ரூபம் ராமனின் முகமோ யோகத்தின் சாரம்
பூமாலை உடனே ஓர் மதுமலர் எழுந்தாள்
✨
நீ நீ எந்தன் நிழல் இனி
என் ஜானகி இனி
சேர்ந்த உரிமை வழங்கினான் ஸ்ரீராம மூர்த்தியே
ஆதி அந்த அன்பிலே
அம்ரித ராகமோ
ராம அம்ருதரன் ஹ்ருதயம் பரிசு சீதைக்கு
மோகனம் மனோகரம் இது மாமுனி அருள் சுயம்வரமோ
✨
ஆஜானுபாகுவே விழிகோடு அவளின் பாதை
ஆனந்த ராகமே கிளிப்பேடு அழகுசீதை
✨
தேவர்கள் தித்திக்க நாமெல்லாம் சிந்திக்க வேதங்கள் அர்ச்சிக்கும் சீதாராமன் கதை புதிது சுகம் இனிது அதன் மகிமை மிக பெரிது
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக