சீதா ராம சரிதம் ஸ்ரீ சீதா ராம சரிதம்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:ஸ்ரீராம ராஜ்ஜியம்

ஆண்டு:2011

வரிகள்:பிறைசூடன்

இசை:இளையராஜா

பாடியவர்கள்:அனிதா, ஸ்வேதா மோகன்

✨✨✨✨✨✨✨✨✨

சீதா ராம சரிதம் ஸ்ரீ சீதா ராம சரிதம்

கானம் பொங்கும் ஞானம்

தியாகம் ஜென்ம புனிதம்

ஒரு முறை செவி பட வளமும் காணலாம்

அது வேத வடிவம்

லோக கணிதம்

ஆதி கவி வால்மீகி எழுதும் (சீதா)

கோதண்ட பானியாய் தண்டகாரன்யமதில் குடிவந்து மனையோடு நின்றனன் (2)

கண்ணில் இமையாய் தம்பி வந்தனன் வானத்தின் தேவனவன் மலர் நனைத்ததே

சுந்தர ராமனை மோகித்தாள் ராவண சோதரி சூர்ப்பணகை

நீதி சொல்லியும் விலகவில்லை

அறிவுரை கேட்கவும் மனமுமில்லை

தவிர்க்கமுடியா லக்ஷ்மணனே மூக்கையும் காதையும் அறுத்தனனே

அண்ணா பாரேன ஆத்திர நாடகம் ராவண சபையில் ராட்சசி….

சூழ்நிலையில் மாயம் செய்தான் ராவணனே

மாய மானாய் மாறினானே மாரீசனே

சீதை விரும்ப அதனை விரட்டி பாய்ந்தனன் ஸ்ரீ ராமனே

அந்த சமயம் சீதையை சிறை எடுத்தான் ராவணனே

கடலின் நடுவில் இலங்கையிலே காவல் கைதி சீதை

காமேன்ரி ராட்சசியின் உரத்த பிடியில் பேதை

சோகத்தீவில் நின்றாலே வைதேகி

அந்த சீதையிலா சோகத்திலே தாசரதி

சீதா சீதா ...

சீதா சீதா ...

என சீதைக்கு அது கேட்கும்படி

வானம் இடிந்து விழுந்தது போல்

அவளின்றியே சீதா பதி

ராமனின் நிலையை பார்த்தொரு சூழ்நிலை வெட்கி விழந்தன வேதங்களே

சீதைக் எனித்த கொடூரம்

ராமன் நெஞ்சில் பூகம்பம்

கமல விழிகள் கொஞ்சி முழுதும்

பாவம் கண்ணீரிலே

காண முடியா கதிரவன் கடலின் உள்மூழ்ந்ததே (2)

வானர ராஜன் சுக்ரீவனுடன் ராமனை சேர்த்தான் மாருதி

கடலினை தாண்டி இலங்கையை சேர்த்து கண்டான் அங்கே சீதையை

ராமனின் மோதிரம் பணிவுடன் தந்து ராமன் செய்தியை சொன்னாச்சு

இலங்கை எரித்து காற்றினை துளைத்து சீதை நிலையை ராமன் கேட்க

சொன்னது என்ன செய்தது என்ன கைகள் கட்டி சொன்னான்

வாயு வேகத்துடன் வானர சேனைகள் கடலுக்கு பாலம் கட்டினர்

மாறு வேடத்துடன் ராம பத்ரனும் ராவணன் தலையை வீழ்த்தினான்

அனைவரும் சூழ்ந்திட உடன் வரும் சீதையை தூரந்தனில் நிற்க கூறினான்

அந்த பாடு பட்டு சீதை சிறையை விட்டு அழைத்து வந்த ஸ்ரீ ராமன்

நந்தம் வாழ ஜெகமெங்கும் காணவே விந்தை பரீட்சை விதித்ததேனோ?

எதற்கு இந்த பரீட்சை?

யாருக்கு இந்த பரீட்சை?

ஸ்ரீ ராமனின் மனைவிக்கா கற்பு பரீட்சை?

அளவிலாத அருள்நிதிக்கா அக்னி பரீட்சை?

தசரதனின் குல நிதிக்கா தர்ம பரீட்சை?

ஜனகன் மகள் ஜானகிக்கா மான பரீட்சை?

ராமன் உயிர் ராணிக்கா?

ஜானகி பொன் மேனிக்கா?

சூரிய குல வாழ்விற்கா?

பூலோக வார்த்தைக்கா?

எதற்கு இந்த பரீட்சை?

யாருக்கு இந்த பரீட்சை?

ஸ்ரீ ராமா…..

அக்னி நோக்கி குதித்தாள் அவமானத்தினால் சதி (2)

நிழலும் எரிந்து நிஜமும் தெரிந்து நிலை குலைந்தது அவனி

அக்னி தேவன் அலறலே அண்டம் எங்கும் ஒலித்ததே

சீதை மகா பத்தினி அதை ஜகமே வழி மொழிந்ததே

உலகில் அனைவருக்கும் சீதை புனிதவதி சாக்ஷி ஆனான் ஸ்ரீ ராமனே

அருட்ஜானகி உடன் அயோத்தி சென்றான் சகல தர்மனுதன் தேவனே சீதா சமேத ஸ்ரீ ராமனே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்