தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:தாய்மொழி

பாடகர்:அருண்மொழி

இசை:இளையராஜா

ஆண்டு:1992

வரிகள்:கங்கை அமரன்

✨✨✨✨✨✨✨✨✨

தாய் இல்லாப் பிள்ளை ஒரு தாலாட்டு பாட

வாய் இல்லாப் பிள்ளை சோகத்தைக் கூற

இது காத்தோடு ஆத்தோடு போகும்

மேகம் போல் ஓடம் போலே

இது கரை ஓரம் ஓர் நாளில் சேரும்

காலம் நல் நேரம் வந்தாலே.....(தாய்)

தாய் ஒரு பாவத்தின் சின்னம் என்று

பிள்ளை தள்ளி வைத்தான்

ஊர் ஒரு பொய் கட்டி விட்டதென்று

பின்பு தான் அறிந்தான்

பட்டறிவாய் வாழ்க்கைப் பாடத்தை

கற்றுக் கொண்டான்

போதும் என்று ஊரின் உறவை

வெட்டிக் கொண்டான்

தண்ணீரிலே எண்ணையைப் போல்

ஒட்டாமல் வாழ்கிறான்....(தாயில்லா)

நீர் ஈரம் காணாத பாதை என்று

யாரும் பேசிடுவார்

நீர் இந்தப் பாறைக்குள் ஊறும் என்று

இங்கு யார் அறிவார்

மற்றவர் போல் இங்கு இவனும் மானிடன்தான்

உள்ளத்திலே நூறு நினைப்பு உள்ளவன்தான்

எண்ணங்களை என்னவென்று

சொல்லாமல் மூடி வைத்தான்...(தாயில்லா)

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்