கரையோர காற்று கல்யாண வாழ்த்து
✨✨✨✨✨✨✨✨✨
படம் : பகலில் பௌர்ணமி
பாடல்: கங்கை அமரன்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை : இளையராஜா
✨✨✨✨✨✨✨✨✨
ஆண் : கரையோர காற்று
கல்யாண வாழ்த்து
காதோடுதான் கூறுதோ
லல லாலா லா லல லாலா லா
லல லாலா லா லல லாலா லா
குழு : ஆஆ…..ஆஅ……ஆஅ…..ஆ
ஆஆ…..ஆஅ……ஆஅ…..ஆ
ஆண் : கரையோர காற்று
கல்யாண வாழ்த்து
காதோடுதான் கூறுதோ…
பெண் : கரையோர காற்று
கல்யாண வாழ்த்து
காதோடுதான் கூறுதோ…
குழு : ஆஆ…..ஆஅ……ஆஅ…..ஆ
ஆஆ…..ஆஅ……ஆஅ…..ஆ
ஆண் : தினம் தூது போகும் மேகம்
பனி தூறல் போடுதோ
பெண் : ஒரு தேவன் தேவியாக
இரு ஜீவன் கூடுதோ
ஆண் : கரையோர காற்று
கல்யாண வாழ்த்து
ஆண் : வானவில் தானொரு
வஞ்சியாய் வந்தாடுதோ
வாலிபம் வாடிட
நெஞ்சையே பந்தாடுதோ
பெண் : ஐவகை அம்புகள்
பார்வையில் உண்டானதோ
மார்பிலே பாய்ந்தாடும்
மோகங்கள் கொண்டாடுதோ
ஆண் : மடி ஊஞ்சலில்
பெண் : மணிகிளிகள் இரண்டும்
ஆண் : உறவாடலாம்
பெண் : மது ரசங்கள் இதழில்
ஆண் : வழிந்தோடலாம்
பெண் : ஒரு கவிதை இரவில்
ஆண் : அரங்கேறலாம்
பெண் : அதை பயிலும் பொழுதில்
குழு : ஆஆ…..ஆஅ……ஆஅ…..ஆ
ஆஆ…..ஆஅ……ஆஅ…..ஆ
இருவர் : சுகம்
ஆண் : தான் கூடலாம்
நூலிடை வாடலாம்
பெண் : நாள் வாய்க்குதோ
தோகை மயில்
தோளில் சாய்ந்தாட
ஆண் : கரையோர காற்று
கல்யாண வாழ்த்து
பெண் : ஆரம்பம் ஆனதே
ஆசையின் ஆராதனை
ஆடையால் மூடினால் போகுமா பூவாசனை
ஆண் : நாணமே ஓய்வெடு
காதலன் கை தீண்டினால்
ராத்திரி வேளையில்
தாமரை கை ஏந்தினாள்
பெண் : விரல் தீண்டினால்
ஆண் : இதழ் சிவந்து சிரிக்கும்
பெண் : வெண்தாமரை
ஆண் : அதன் புருவம் இரண்டும்
பெண் : திறக்கும் திரை
ஆண் : உனை நெருங்கி இருக்கும்
பெண் : நெடுநாள் வரை
ஆண் : தினம் பறிக்க மணக்கும்
இருவர் : பனிவாய்
பெண் : பூச்சரம் ததும்பிடும் தேன்குடம்
ஆண் : நான் ஏந்தலாம் மேலும் கீழும்
மேனி தள்ளாட
பெண் : கரையோர காற்று
கல்யாண வாழ்த்து
ஆண் : காதோடுதான் கூறுதோ…
பெண் : தினம் தூது போகும் மேகம்
பனி தூறல் போடுதோ
ஆண் : ஒரு தேவன் தேவியாக
இரு ஜீவன் கூடுதோ
பெண் :
லால்லா லாலா ல
லால்லா லாலா ல
ஆண் : லால்லா லாலா ல
லால்லா லாலா
✨✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக