பாரடி குயிலே பாச மலர்களை

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:நாங்கள்

ஆண்டு:1992

இசை:இளையராஜா

பாடியவர்:இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

ஆஅ.ஆஆஆஅ..ஆஅ

ஆஅ.ஆஆஆஅ..ஆஅ

ஆஅ.ஆஆஆஅ..ஆஅ

அ.அ.ஆ..ஆஅ.

அ.அ.ஆ..ஆஅ.

பாரடி குயிலே

பாச மலர்களை

பாடடி குயிலே பாத மலர்களை

காலம் முழுவதும்

காலடி நிழலில்

வாழும் குழந்தையே

அவர்கள் மடியிலே

பாரடி குயிலே

பாச மலர்களை

பாடடி குயிலே பாத மலர்களை

தாய் மடியில் சில நாள்

தவழ்ந்து கிடந்த பறவை

வான் வெளியில் பறந்து

திரும்ப வருதல் இயற்கை

யார் பிரிக்க முடியும்

இறைவன் வகுத்த உறவை

ஏழ் பிறப்பும் தொடரும்

உறவில் வரைந்த கவிதை

நான் விரும்பிய

திருநாள் பிறந்தது

என் வரவினில் கதவும் திறந்தது

காலம் முழுவதும்

காலடி நிழலில்

வாழும் குழந்தையே

அவர்கள் மடியிலே

பாரடி குயிலே

பாச மலர்களை

பாடடி குயிலே பாத மலர்களை

காலம் முழுவதும்

காலடி நிழலில்

வாழும் குழந்தையே

அவர்கள் மடியிலே

பாரடி குயிலே

பாச மலர்களை

பாடடி குயிலே பாத மலர்களை

ஆழ்கடலில் நெடுநாள்

அலைந்து திரிந்த படகு

ஓர் கரையில் ஒதுங்க

தவித்துக் கிடந்த பொழுது

நான் வணங்கும் இறைவன்

தந்தை வடிவம் எடுத்தான்

தான் சுமந்த மகளாய்

தழுவித் தழுவி அணைத்தான்

நான் விரும்பிய

வரம்தான் கிடைத்தது

நீர் அரும்பிய முகம்தான் சிரித்தது

காலம் முழுவதும்

காலடி நிழலில்

வாழும் குழந்தையே

அவர்கள் மடியிலே

பாரடி குயிலே

பாச மலர்களை

பாடடி குயிலே பாத மலர்களை

காலம் முழுவதும்

காலடி நிழலில்

வாழும் குழந்தையே

அவர்கள் மடியிலே

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்