சந்த்ர சேகரேந்திர சரஸ்வதி திருப்பாதம்
✨✨✨✨✨✨✨
வரிகள்:நெல்லை அருள்மணி
பாடியவர்: சீர்காழி S.கோவிந்தராஜன்
✨✨✨✨✨✨✨✨
சந்த்ர சேகரேந்திர சரஸ்வதி திருப்பாதம்
சந்ததம் பணிந்தார்க்கு சர்வமும் க்ஷேமமே
இந்திராதி தேவர் வந்து எழிற்கவரி வீசிநிற்க
நந்தியம்பெருமானும் நல்லாசி தந்தருள
வந்திடும் கைலாசம் வரன் தரும் அரன்விலாசமே.
✨
காமாட்சித் தாய்மடியில் சீராட்சி புரிந்துவரும்
காமகோடி தரிசனம் காணக்காண புண்ணியம் (காமாட்சி)
✨
தவக்கோலம் தனக்காக தர்மங்கள் நமக்காக
அவதாரத் திருச்செல்வர் அபிராமி அருட்செல்வர் (காமாட்சி)
✨
பாரிஜாத நறுமணம் பரவும்சீர் பாதமே
சதுர்வேத கீதமே சங்கரனைப் பாடுமே
ஹரஹர சங்கர ஜயஜய சங்கர (காமாட்சி)
✨
கோபுரத் திருவுள்ளம் கொடிமரக் கனிவுள்ளம்
திருக்காஞ்சி முனிவுள்ளம் தீபத்தின் ஒளிவெள்ளம்
மவுன நிலையாலே புவனம் முழுதாளும்
சிவனார் திருக்கோலம் சங்கரி புகழ்க்கோலம்
வணங்கிடும் கரமுண்டு வாழ்த்திடும் மனமுண்டு
மணம்தரும் பணிவுண்டு மாரிபோல் அருளுண்டு (காமாட்சி)
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக