கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:பாண்டித்துரை

ஆண்டு: 1992

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா

இசை : இளையராஜா

வரிகள்:வாலி

பெண் : கானக் கருங்குயிலே

கச்சேரிக்கு வா வா

கச்சேரி வைக்கையிலே

கண் மலரும் பூ வா

முத்துப்போலே மெட்டுப்பாட

முத்துமால கட்டிப்போட

வந்தேனே…..ஏ….

ஆண் : கானக் கருங்குயிலே

கச்சேரிக்கு வா வா

கச்சேரி வைக்கையிலே

கண் மலரும் பூ வா

பெண் : தேனும் பாலும்

வேம்பாப் போச்சு

உன்னைப் பாத்த நாளு

ஆண் : தூர நின்னேன்

நீதான் என்னை

தூண்டில் போட்ட ஆளு

ஆண் : மாடி வீட்டு மானா

கூரை வீட்டில் வாழும்

பெண் : வீடு வாசல் யாவும்

நீதான் எந்த நாளும்

ஆண் : மானங்காக்கும்

சேலை போலே……ஹே….

பெண் : மாமன் வந்து

கூடும் நாளே

வெட்கம் ஏறும் மேலே ….

ஆண் : கானக் கருங்குயிலே

கச்சேரிக்கு வா வா

கச்சேரி வைக்கையிலே

கண் மலரும் பூ வா

முத்துப்போலே மெட்டுப்பாட

முத்துமால கட்டிப்போட

வந்தேனே….ஏ…..

பெண் : கானக் கருங்குயிலே

கச்சேரிக்கு வா வா

கச்சேரி வைக்கையிலே

கண் மலரும் பூ வா

ஆண் : சோளக் கதிரு ஒண்ணு

சேலைக்கட்டி ஆடும்

பெண் : நீலக்குருவி வந்து மால

கட்டிப் போடும்

பெண் : மாமன் மனசுக்குள்ளே

மொட்டு விட்டேன் நான்தான்

ஆண் : வாழ வயசுப்புள்ள

வார்த்தையெல்லாம் தேன்தான்

பெண் : பாசம் பந்தம் எங்கே போகும்……….

போனால் தீயாய் தேகம் வேகும்

தீராதம்மா மோகம்

பெண் : கானக் கருங்குயிலே

கச்சேரிக்கு வா வா

கச்சேரி வைக்கையிலே

கண் மலரும் பூ வா

ஆண் : முத்துப்போலே மெட்டுப்பாட

முத்துமால கட்டிப்போட வந்தேனே…..

ஆண் : கானக் கருங்குயிலே

கச்சேரிக்கு வா வா…..

பெண் : கச்சேரி வைக்கையிலே

கண் மலரும் பூ வா…..

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்