காணீரோ நீர் காண் சோழ வெற்றி வாள் ஒன்றை காணீரோ

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:பொன்னியின் செல்வன் 2

பாடகர்கள் : ஷங்கர் மஹாதேவன், கே. எஸ். சித்ரா மற்றும் ஹரிணி

இசை  : ஏ. ஆர். ரகுமான்

வரிகள் : இளங்கோ கிருஷ்ணன்

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் குழு : காணீரோ நீர் காண்

சோழ வெற்றி வாள் ஒன்றை காணீரோ

ஓர் அழகிய பூவே

செல்லுதியோ

மலரிடு போ சகி

ஆண் : வீரா ராஜ வீரா

சூரா தீர சூர

வீழா சோழ வீர

சீரார் ஞாலம் வாழ

வாராய் வாகை சூட

ஆண் : தொடுவோர் பகைப்போரை

நடுகல் சேர்க்கும் வீர

மாறா காதல் மாறா

பூவோர் ஏங்கும் தீர

பாவோர் போற்றும் வீர

உடைவாள் அரை தாங்க

பருதோள் புவி தாங்க

வளவா எமை ஆள

வருவாய் கலம் ஏற

ஆயிரம் வேழம் போல

போர்க்களம் சேரும் சோழ

ஆண் : வேந்தா ராஜ ராஜ

வாராய் வாகை சூட

ஆண் : வீரா ராஜா வீர

சூரா தீர சூர

பெண் குழு : விறலியர் கானம் பாட

கணிகையர் நடனமாட

பாவையர் குலவை போட

பரிதேர் சகடமாட

பெண் குழு : அலைமேல் கதிரை போல

விளங்கிடும் அருமதேவ

படையணி பெருமை சாற்ற

புலவர்கள் தமிழும் தீர

பெண் குழு : கடல் மேல் புயலைப்போல

கலங்கல் விரைந்து பாய

வன்னலை சீராட்ட

தென்புலம் ஏகும் வீர

ஆண் : வீரா ராஜா வீர

சூரா தீர சூர..

ஹா ..ஆஅ…

பெண் : ஹா..ஆஅ….ஆ…

விறலியர் கானம் பாட

கணிகையர் நடனம் ஆட

பாவையர் குலவை போட

பரிதேர் சகடமாட

பெண் : அலைமேல் கதிரைப் போல

விளங்கிடும் அருமதேவ

படையணி பெருமை சாற்ற

புலவர்கள் தமிழும் தீர

பெண் : கடல் மேல் புயலைப்போல

கலங்கள் விரைந்து பாய

வன்னலை சீராட்ட

தென்புலம் ஏகும் வீர

ஆண் : வீரா ராஜா வீர

சூரா தீர சூரா

அனைவரும் : கூற்றாகி செல்

காற்றாகி செல்

சர சர சர சரவென

வேல்மழை தான் பெய்திட

பர பர பர பரவென

பாயட்டும் பாய்மரம்

ஆண் : ஹா..ஆஅ…

அனைவரும் : மறவர்கள் வீரம் காண

சமுத்திரம் வெறுவிப் போகும்

உருவிய வாளைக் கண்டு

பிறைமதி நாணிப்போகும்

எதிரிகள் உதிரம் சேர்ந்து

குதிகடல் வண்ணம் மாறும்

உதிர்ந்திடும் பகைவர் தேகம்

கடலுக்கு அன்னமாகும்

அனைவரும் : புலிமகன் வீரம் கண்டு

பகைப்புலம் சிதறி ஓடும்

சரமழை பெய்தல் கண்டு

கடல் அலை கரைக்கு ஓடும்

அடடா பெரும் வீர

எடடா துடிவாளை

தொடடா சர மாலை

அடுடா பகைவோரை

ஆண் : வீரா ராஜ வீர

சூரா தீர சூர

வீழா சோழ வீர

சீரார் ஞானம் வாழ

வாராய் வாகை சூட

பெண் குழு : தொடுவோர் பகைப்போரை

நடுகல் சேர்க்கும் வீர

மாறா காதல் மாறா

பூவோர் ஏங்கும் தீர

ஆயிரம் வேழம் போல

போர்க்களம் சேரும் சோழ

அனைவரும் : வேந்தா ராஜ ராஜ

வாராய் வாகை சூட

அனைவரும் : எம் தமிழ் வாழ்க வாழ்க

வீர சோழம் வாழ்க

நற்றமிழ் வாழ்க வாழ்க

நல்லோர் தேசம் வாழ்க

அனைவரும் : எம் தமிழ் வாழ்க வாழ்க

வீர சோழம் வாழ்க

நற்றமிழ் வாழ்க வாழ்க

நல்லோர் தேசம் வாழ்க

அனைவரும் : எம் தமிழ் வாழ்க வாழ்க

வீர சோழம் வாழ்க

நற்றமிழ் வாழ்க வாழ்க

நல்லோர் தேசம் வாழ்க

வீரா......

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்