மஹாலக்ஷ்மி அஷ்டகம்
✨✨✨✨✨✨✨✨✨
மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம்
✨✨✨✨✨✨✨✨✨
#அஷ்டகம்_என்றால்
✨
எட்டுப் பொருள்களைக் கொண்டது என்பது பொருள். ஈரடிகளாக வரும் இந்த ஸ்லோகம் இந்திரனால் மஹாலக்ஷ்மியை துதித்து “பத்ம புராணத்தில்” பாடப்பட்டது.
✨✨✨✨✨✨✨✨✨
இந்த மஹாலக்ஷ்மி அஷ்டகத்தை ஒரு முறை, இரு முறை, மூன்று முறைகளால் சொல்வதால் ஏற்படும் பலன்களைக் குறிப்பது.
✨
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே
ஷங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
✨
படைப்பின் மூல காரணங்களாக விளங்குபவளும், ஸ்ரீபீடத்தில் வைத்து ஸூரர்களால் வணங்கப்படுபவளும், அழகிய கரத்தில் சங்கையும், சக்கரம், கதை வைத்திருப்பவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.
✨
நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
✨
கருட வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், கோலாஸூரர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவளும், நம் சகல பாவங்களையும் நீக்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.
✨
ஸர்வக்ஞே சர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி
ஸர்வதுக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
✨
அனைத்தையும் அறிந்தவளும், அனைத்து வரங்களைக் கொடுப்பவளும், துஷ்ட குணங்களை அழிப்பவளும், துக்கங்களை அழிப்பவளுமான உன்னை வணங்குகிறேன்.
✨
ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்தி முக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
✨
சாதனைகள் புரிந்து நல்ல முறையில் வாழ புத்தியை அளிப்பவளும், இந்த உலகில் செழிப்புடன் வாழ்ந்து அவளின் பாத கமலங்களை அடைய அருள்பவளும், மந்திரங்களின் சூட்சும ஸ்வரூபமாக விளங்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.
✨
ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகஜே யோக
ஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
✨
ஆதியந்தம் இல்லாதவளும், சகல விஷயங்களுக்கு பின்னால் இருப்பவளும், யோகமாக பிறந்தவளும், யோகத்தால் இணைந்தவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.
✨
ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹாபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
✨
அனைத்து விஷயங்களுக்கும் பின்னால் சூட்சும வடிவத்தில் ஆதார சக்தியாக விளங்குபவளும், பயங்கர வடிவத்தில் ருத்ரணியாக விளங்குபவளும், பெரும் சக்தியின் பிறப்பிடமாக விளங்குபவளும், அனைத்து பாபங்களையும அழிப்பவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.
✨
பத்மாஸன ஸ்திதே தேவி பரப்பிரஹ்ம ஸ்வரூபினி
பரமேஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
✨
தாமரை ஆசனத்தில் சாந்தம் தவழும் முகத்துடன் அமர்ந்திருப்பவளும், உயர்ந்த ப்ராமணியாக விளங்குபவளும், இப்பிரஞ்சத்தின் உயர்ந்த கடவுளாக, தாயாக விளங்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.
✨
ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத்ஸ்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
✨
தூய்மையின் அம்சமான வெள்ளை உடையை அணிந்திருப்பவளும், பலவித ஆபரணங்கள் அணிந்திருப்பவளும்,
பிரபஞ்சத்தில் தாய்க்கு தாயாக காப்பவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.
✨
மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய : படேத் பக்திமான் நர :
ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா
✨
யார் ஒருவர் இந்த மஹாலக்ஷ்மி அஷ்டகத்தை பக்தியுடன் சொல்கிறார்களோ அவர்கள் சகலவிதமான சம்பத்துக்களையும் பெற்று அன்னையின் காலடிகளை அடைவார்கள்.
✨
ஏக காலே படேந் நித்யம் மஹா பாப விநாஷணம்
த்விகாலம் ய : படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித:
✨
இந்த ஸ்லோகத்தை ஒரு முறை சொன்னால் அனைத்து பாவங்களும் நீங்கும்.
இரு முறை சொன்னால் தனங்களையும், தான்யங்களையும் அடைவோம்.
✨
த்ரிகாலம் ய படேந்நித்யம் மஹா ஷத்ரு விநாஷனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸூபா
✨
மூன்று முறை சொன்னால் நம்முடைய எதிரிகள் அழிவார்கள்.
தினம் இதை கூறி மஹாலக்ஷ்மியின் பரிபூரண அருள் பொங்கிய சாந்த வடிவத்தில் நாம் சகல அனுக்ரஹங்களையும் பெறுவோம்.
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக