பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன்
✨✨✨✨✨✨✨✨✨
படம் : நினைவே ஒரு சங்கீதம்
பாடல் : பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன்
பாடியவர் : எஸ்.ஜானகி
இசை : இளையராஜா
✨✨✨✨✨✨✨✨✨
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா
அது உலவும் எந்தன் மனம் ஒரு வானம் பூங்காவனம்
புது மேகம் இவள் தேகம் அதில் மோதும் தினம் பலவித சுகம் தரும்
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா
✨
சேரும் காலம் தேடி தேகம் சிந்து பாடும்
தேவன் வந்து சேர தேவை சொல்லக் கூசும்
தோளில் ஒன்று கூட சோகம் மெல்ல ஓடும்
மேளம் தாளம் போட மோகம் மேலும் கூடும்
அங்கங்கள் உந்தன் சொந்தம் இன்பம் சிந்தும் அன்புசங்கம்
பாடல் ஒன்றைப் பாடும் நேரம் பாவை எண்ணம் வாடுதே
மாற வேண்டும் காதல் பாரம் மாலை ஒன்று மலரடி விழுந்திட
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா
✨
காற்றில் ஆடும் கூந்தல் காதல் சொல்லி ஆட
காதல் கொண்ட காமன் கைகள் வந்து கூட
தேகம் என்ற கோவில் பூஜை நேரம் தேட
தாகம் மோகம் பாட தாளம் ராகம் பாட
ஏதேதோ எண்ணம் வந்து சொல்லிச்சொல்லி என்னை கிள்ளி
ஏற்றும் இன்பம் கோடி கோடி ஏக்கம் தன்னை காட்டுதே
காற்றும் என்னை கூடிக் கூடி காதல் எனும் கனவுகள் தொடர்ந்திட
✨
பகலிலே…பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா
அது உலவும் எந்தன் மனம் ஒரு வானம் பூங்காவனம்
புது மேகம் இவள் தேகம் அதில் மோதும் தினம் பலவித சுகம் தரும்
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா.
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக