புதிய நிலாவே ஒரு இனிய கனாவே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:பேண்டு மாஸ்டர்

ஆண்டு:1993

இசை:தேவா

பாடியவர்:S.P.B

வரிகள்:வாலி

✨✨✨✨✨✨✨✨✨

புதிய நிலாவே ஒரு இனிய கனாவே

புதிய நிலாவே ஒரு இனிய கனாவே

மாலைகள் நெஞ்சில் தொட்டு தாலாட்ட

மாணிக்க வைரம் உன்னை சீராட்ட

நாணயம் அள்ளி தந்து நீ கேட்க

நான் இங்கு வந்தேன் உன்னை பாராட்ட

ஓராயிரம் மாயங்களும்

நான் பார்த்தேன் என் கண்ணிலே

தவழ்ந்து வரும்

(புதிய நிலாவே..)

நான் நினைத்து வந்த தேன் கனவு

அது வாழ்வில் ரொம்ப தூரம்

ஏன் எனக்கு இந்த வீண் மயக்கம்

என்று நேரில் சொல்லும் நேரம்

(நான் நினைத்து..)

பொத்தி வச்ச நெஞ்சை விட்டுத்தான்

நல்ல முத்து ஒன்று வெளியாச்சு

புத்தி கெட்ட சின்ன பிள்ளைக்கு

ஒரு உண்மை இன்று தெளிவாச்சு

வானில் வரும் வர்ணங்களே

நிறம் மாறும் எண்ணங்களே

சிவந்து வரும்

(புதிய நிலாவே..)

நாம் நினைப்பதொன்று நேர் நடப்பதொன்று

வாழ்வில் கண்ட பாடம்

பால் நிறத்தினிலே கள் இருக்குதென்று

காலம் சொன்ன பாடம்

(நாம் நினைப்பொதொன்று..)

புண்ணியங்கள் செய்திருக்கணும்

இந்த கண்மணியை மணந்திடவே

மின்னல் ஒன்று மண்ணில் வந்ததே

பல மன்னவரும் மயங்கிடவே

பூவே தினம் பூச்சூடியே

நூறாண்டு நீ வாழ்கவே

மயங்கி வரும்

(புதிய நிலாவே..)

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்