ஜூலை பதினாறு வந்தால் வயது பதினேழுதான்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:குட்லக்

ஆண்டு:2000

பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ், சுஜாதா மற்றும் சித்ரா

இசை : மனோஜ் பட்நாகர்

✨✨✨✨✨✨✨✨✨

பெண் : ஜூலை பதினாறு வந்தால்

வயது பதினேழுதான்

கன்னம் என் கன்னம் கண்டால்

வயது பதினாலுதான்

எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன்

எங்கு பிறந்தானோ..... ஓஓ.....ஓஓஹ்

ஆண் : ஏப்ரல் பதினொன்று வந்தால்

வயது மூவேழுதான்

வண்ணத் திருமேனி கண்டால்

வயது பதினேழுதான்

வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி

எங்கு பிறந்தாளோ….ஓஓ.....ஓஓஹ்

பெண் : காதல் மேல் காதல் கொள்ள வந்தேன்

காதல்தான் என்னை காணவில்லை

காதல்தான் தேர்வில்லாத பள்ளி

கல்லாமல் நானும் போவதில்லை

பெண் : அந்த கண்ணாளன் முகம் காணவே

என் கண்கள் பூத்தாடுதே

அந்த பொன் நாளும் கை கூடவே

என் மார்பு கூத்தாடுதே........

ஆண் : ஏப்ரல் பதினொன்று வந்தால்

வயது மூவேழுதான்

வண்ணத் திருமேனி கண்டால்

வயது பதினேழுதான்

வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி

எங்கு பிறந்தாளோ….ஓஓ.....ஓஓஹ்

ஆண் : கண் பார்த்து கண்கள் காதல் கொள்ளும்

மெய் காதல் தேடும் எந்தன் உள்ளம்

பொய் காதல் தன்னை மட்டும் காணும்

மெய் காதல் இன்னோர் ஜீவன் பேணும்

ஆண் : என் உடல் எங்கும் கண்ணாகவே

என் காதல் நான் தேடுவேன்.....

அது நிறைவேறும் திருநாளிலே.....

எவரெஸ்டில் நான் பாடுவேன் ஏஹ் ஏஹ்..

பெண் : ஜூலை பதினாறு வந்தால்….

வயது பதினேழுதான்….

ஆண் : வண்ணத் திருமேனி கண்டால்….

வயது பதினேழுதான்…

பெண் : எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன்….

எங்கு பிறந்தானோ….

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்