மூன்றாம் உலகப்போர் பகுதி 2

கோபம் வரும்போது மனிதன் மிருகம் ஆகிறான் என்று கூறும் கருத்தமாயிக்கு, விஷம் ஊட்டுவது போல் முத்துமணி ஒவ்வொரு செயல்களும் செய்கிறான்.ஒரு பக்கம் கதையில் சுழியன், பவளாங்கி, நகைச்சுவை ஊட்டும்  பொன்னுச்சாமி இவர்களின் பகுதிகளும் சுவாரஸ்யம் கூட்டுகிறது .

கடைசியில் சிட்டம்மா கருத்தமாயியை,  தன்  மடியில் போட்டு அழுவதும்,   அவள் கண்ணீரால் வேட்டி நனைவது , அவள் முகம் முழுவதும் ரத்த வெள்ளம் நிறைந்திருப்பது மிகவும் நெஞ்சுருக்கமான காட்சி.

இந்த உலகத்தின் தலையெழுத்து இந்நாட்டு இளைஞர்கள் கையில் இருப்பதாய் சொல்லி முடிக்கிறார் கடைசியில்.

நம் நாட்டு சிறப்பினை வெளிநாட்டவர் அறிந்திருப்பதும் ஆனால் நம் மக்கள் அதை அறியாதிருப் பதும் .சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புவிவெப்பமயமாதல், முதலாளித்துவம் , தனியார்மயமாக்கல் போன்ற அனைத்து விஷயங்களும் அடங்கியுள்ளது. ஒரு பகுதியில் வைரமுத்து அவர்களே கதாபாத்திரமாக வருகிறார்.
பல கிளை கதைகள், சமுதாய விழிப்புணர்வு  தகவல் துளிகளோடு உள்ள அற்புதமான படைப்பு.





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்