மூன்றாம் உலகப்போர்

வைரமுத்து அவர்களின் அழகான படைப்பில் வெளிவந்த கதைத்தொகுப்பு.
கருத்தமாயி முக்கிய கதாபாத்திரம் . குடும்பத்திற்காக உழைத்து உயிர்விடும் குடும்பத்தலைவர் . இளம்வயதில் தந்தையை இழிவு படுத்தியவனை தான் கொன்று சிறைச்சாலை சென்று திரும்புகிறார்.இவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் முத்துமணி. இளையவன் சின்னப்பாண்டி. 

குடும்பத்திற்கு பொறுப்பான பிள்ளை சின்னப்பாண்டி. முத்துமணி நெஞ்சில் பணத்தை சுரண்டும் எண்ணத்தை தவிர வேறு ஏதும் இல்லை . வீட்டிலேயே திருடுவது . ஊர் சுற்றுவது , இப்படியே காலம் கழிக்கிறான். இளையவன் சின்னப்பாண்டி விவசாய கல்வி படித்துவிட்டு தந்தைக்கு உதவியாக இருக்கிறான். 

மறுபக்கம் கிளை கதையாக வெளிநாட்டு கதாபாத்திரங்கள் எமிலி. அவள் அட்லாண்டாவை சேர்ந்தவள். மற்றொரு ஜப்பானிய கதாபாத்திரம் இஷிமுரா. முத்துமணி  மனைவி லக்ஷ்மி. அவர்களுக்கு இரு பிள்ளைகள் அஜய்தேவ்  மற்றும் ரூபகலா. 


எப்படியோ பணம்கொடுத்து காட்டு இலாகா அலுவலர் வேலை நண்பனின் துணையோடு வாங்கிவிடுகிறான். அந்த வேலையை வைத்துக்கொண்டு  அட்டணம்பட்டி கிராமமான அவனது ஊரையே பேரம் பேசுகிறான் முத்துமணி. 

எமிலி தனது நண்பனான சின்னப்பாண்டியிடம் நட்பு ரீதியாக பழகுகிறாள். அவள் மீது காதல்வயப் படுகிறான் சின்னப் பாண்டி.எமிலி அழிந்து வரும் விவசாயத்தை பற்றியும், தனியார்மயமாக்கல், பூமிவெப்பமாதல் உள்ளிட்ட பல கருத்துக்கள் உள்ளடங்கிய ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றை எழுதி உநெஸ்கோவின் விருது பெறுகிறாள்.சொற்பொழிவாற்ற தமிழ்நாடு வருகிறாள். தனது கல்லூரியில் பேச அழைப்பது  முத்துப்பாண்டி. எமிலியின் பேச்சை கேட்டு வியக்கிறான். தனது கிராமமான தேனி  மாவட்டத்தில் உள்ள அட்டணம்பட்டிக்கு கூட்டி செல்கிறான் எமிலியையும், இஷிமுராவையும்.

இஷிமுராவின் தந்தையும் தாயும்  சுனாமி வந்து இறந்துவிடுகின்றனர். சின்னபாண்டியின் வீட்டின் அசௌரியங்கள் அனைத்தையும் எமிலியும் இஷிமுராவும் பொறுத்துக் கொள்கின்றனர். சின்னபாண்டியின் தாய் சிட்டம்மா. திருமணம் ஆகி சில நாட்களிலேயே பேச்சுவார்த்தைகள் இல்லாமல் தந்தை கருத்தமாயியும் சிட்டம்மாவும் வாழ்கின்றனர்.எமிலி மற்றும் இஷிமுராவின் தூண்டுதலால் அவன் வாழும் கிராமத்தையே மிகப் பொலிவாக மாற்றுகிறான்  சின்னப்பாண்டி.

ஒத்தவீட்டு மூலி, போன்ற கதாபாத்திரங்கள் இடை இடையே  கதைக்கு சுவாரஸ்யம்  சேர்க்கிறது.கிராமத்தில் உள்ள அனைத்து விளைநிலங்களையும் ஏமாற்றி மக்களிடம் இருந்து வாங்கி  விற்க நினைக்கிறான் முத்துமணி. சின்னப்பாண்டி கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை நிலத்தை  கொடுக்க மறுக்கச் செய்கிறான். விளைவு அவன் மீது  பகை ஏற்படுகிறது அண்ணன் முத்துமணிக்கு.

முத்துமணி சுயரூபம் தெரிந்த வருமான  வரி இலாகா துறை அவன் வீட்டிற்கு சோதனை போட்டு உண்மைகளை கண்டறிகிறது. அவன் சொத்துக்கள் கையகப் படுத்தப் படுகிறது.பிழைக்க வழியின்றி வேலை பறிபோய், மாமனார் வீட்டில் தஞ்சம் அடைகிறான். 

நாட்கள் போகப்போக அவனது மரியாதை அங்கு குறைகிறது. தாத்தா சொத்து பேரனுக்கு சொந்தம் என்று கூறிக்கொண்டு தந்தையின் விளைநிலத்தையும், வீட்டையும் பங்கு கேட்கிறான். சொத்தை பிரிக்க தான் இருக்கும் வரையில் முடியாதென்று  கருத்தமாயி  கூறிவிடுகிறார். பஞ்சாயத்தை கூட்டி ஞாயம் கேட்கிறான். அவனுக்கு ஊர் பஞ்சாயத்து ஒத்துழைக்க மறுக்கிறது .

சுழியன், கவட்டைகாலன் ஆகிய கதாபாத்திரங்கள்  கதைக்கு இன்னும் பலம் சேர்க்கிறது.சுழியன் கருத்தமாயியின் அண்ணன்.

தனது தாய், தந்தை, அத்தை இஷிமுராவின் பெற்றோருக்காக தனது தோட்டத்திலேயே மரம் நட்டு உயிருக்கு உயிராக வளர்க்கிறார்  கருத்தமாயி. இதற்கிடையில் எமிலி சின்னபாண்டியை நவீன  விஞ்ஞான முறைகளில் சுழியன், கவட்டைகாலன் ஆகிய கதாபாத்திரங்கள்  கதைக்கு இன்னும் பலம் சேர்க்கிறது.


தனது தாய், தந்தை ,அத்தை, இஷிமுராவின் பெற்றோரின் நினைவு சின்னமாக  தனது தோட்டத்திலேயே மரம் நட்டு உயிருக்கு உயிராக வளர்க்கிறார்  கருத்தமாயி. இதற்கிடையில் எமிலி சின்னபாண்டியை,நவீன  விஞ்ஞான முறைகளில்  வேளாண்மையை அதிகரிப்பதை குறித்து கற்றுத்தருவதற்காக அட்லாண்டாவிற்கு கூட்டிச் செல்கிறாள்.

யாரும் இல்லாத நேரம் பார்த்து வாய்ப்பை பயன்படுத்தி கருத்தமாயியின் நிலத்தை தகர்த்து எரிய எந்திர யானையை கொண்டு விளைநிலத்தை நோக்கி செலுத்துகிறான் முத்துமணி.

கருத்தமாயி உயிருக்கு உயிராக வளர்த்த மரங்களை வெட்ட முத்துமணி நினைக்கும்போது கருத்தமாயி தடுக்க அரிவாள் தந்தையின் காலை பதம் பார்க்கிறது. குலதேய்வங்களை இழிவுபடுத்த எண்ணிய முத்துமணியை கருத்தமாயி வெட்டி வீழ்த்துகிறார். விமானத்தில் சின்னபாண்டி புறப்பட கிளம்பும் நேரத்தில் சிட்டம்மா தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு சின்னபாண்டியை வரவழைக்கிறாள்.பேச்சுவார்த்தையே அற்று இருந்த சிட்டம்மா  கருத்தமாயியை கண்டு கதறி அழுகிறாள். கணவன் முன் அழுது புலம்புகிறாள். அந்த சந்தோஷத்தில் பிள்ளையை வெட்டிய துயரை  அவர் மறக்கிறார்.

தொடரும்.......




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்