என் நினைவுதானே… … ஏங்குதே
✨✨✨✨✨✨✨✨✨
படம் - பாடும் வானம்பாடி
பாடியவர் - S.P.B
இசை – பப்பிலஹரி
வரிகள்: வாலி
✨✨✨✨✨✨✨✨✨
என் நினைவுதானே… … ஏங்குதே
பெற்ற அன்னை இல்லையே,
பேசும் தெய்வம் இல்லையே,
அவள்தான் இன்றி நான் இல்லையே.
ஓ.........என் நினைவுதானே.......ஏங்குதே
பெற்ற அன்னை இல்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள்தான் இன்றி நான் இல்லையே
ஓ............என் நினைவுதானே..ஏங்குதே
நீதான்.....நானும் இங்கு பாடல் சொல்லும்
ஞானம் எல்லாம் அள்ளித் தந்த தேவன்
குருநாதனே உனை வாழ்த்தினேன்.
நான்தான்..... தாயும்யின்றி பாட்டுப்பாட
வாயும் இன்றி தத்தளிக்கும் ஜீவன்
எனை வாழ்த்தினால் நான் பாடுவேன்
ஹே..... என் நினைவுதானே ஏங்குதே
பெற்ற அன்னை இல்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள்தான் இன்றி நான் இல்லையே
ஹே..... என் நினைவுதானே ஏங்குதே
நெஞ்சே..... உந்தன் பக்கம் தெய்வம் உண்டு
உன்னை வெல்ல யாரும் இல்லை பாடு
நீ பாடினால் ஊர் பாடுமே
வா வா..... வெற்றி என்னும் மாலை உண்டு
உந்தன் தோளில் வாங்கி கொண்டு ஆடு
வரும் காலமே உன் கையில்தான்
ஹே..... என் நினைவுதானே ஏங்குதே
பெற்ற அன்னை இல்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள்தான் இன்றி நான் இல்லையே
ஹே..... என் நினைவுதானே……ஏங்குதே
நாதம்..... மீட்டும் இந்த தந்திக்குள்ளே
பாலைப்போலே பொங்கி பொங்கி மோதும்
இதுதான் ஒரு இசைக் காவியம்
கீதம்..... என்னுடைய சித்தத்திலும்
என்னுடைய ரத்தத்திலும் ஊறும்
அதற்காகவே நான் வாழ்கிறேன்
ஹே...... என் நினைவுதானே..ஏங்குதே
பெற்ற அன்னை இல்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள்தான் இன்றி நான் இல்லையே
ஓ......என் நினைவுதானே..ஏங்குதே
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக