முதாகராத்த மோதகம் சதாவி முக்தி சாதகம் கலாதரா வதம் சகம் விலாசி லோக
✨✨✨✨✨✨✨✨✨
படம்: தாலாட்டு பாடவா
இசை:இளையராஜா
வரிகள்:வாலி
பாடியவர்கள்: அருண்மொழி,S.ஜானகி
✨✨✨✨✨✨✨✨✨
முதாகராத்த மோதகம் சதாவி முக்தி சாதகம்
கலாதரா வதம் சகம் விலாசி லோக ரக்ஷகம்
அநாயகைக்க நாயகம் விநாசிதேப்ரதைத்யகம்
நதா சுபாஷு நாசகம் நமாமிதம் விநாயகம்
முதாகராத்த மோதகம் சதாவி முக்தி சாதகம்
✨
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிறம் தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
(வராது)
✨
தொடாமலும் படாமலும் உலாவும் காதல் வாகனம்
வராமலும் தராமலும் விடாது இந்த வாலிபம்
உன்னோடு தான் பின்னோடு தான் வந்தாடும் இந்த மோகனம்
கையோடு தான் மெய்யோடு தான் கொஞ்சாமல் என்ன தாமதம்
உன் பார்வை யாவும் நூதனம் பெண் பாவை நீ என் சீதனம்
உன் வார்த்தை அன்பின் சாசனம் பெண் உள்ளம் உந்தன் ஆசனம்
அள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாடும் இந்த பூவனம் (வராது)
✨
கல்யாணமும் வைபோகமும் கொண்டாடும் நல்ல நாள் வரும்
அந்நாளிலே பொன்னாளிலே என் மாலை உந்தன் தோள் வரும்
சல்லாபமும் உல்லாசமும் கண் காணும் நேரம் பூவனம்
சொல்லாமலும் கொள்ளாமலும் திண்டாடும் பாவம் பெண்மனம்
இந்நேரம் அந்த நியாபகம் உண்டாக நீயும் காரணம்
கண்ணார நாமும் காணலாம் செவ்வாழைப் பந்தல் தோரணம்
என் ஆசையும் உன் ஆசையும் அந்நாளில் தானே பூரணம் (வராது)
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக