ஒரு இனிய மனது இசையை
✨✨✨✨✨✨✨✨✨
படம்:ஜானி
வரிகள்:கங்கை அமரன்
இசை:இளையராஜா
ஆண்டு:1980
பாடியவர்: ஜென்சி
✨✨✨✨✨✨✨✨✨
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்.
ஜீவனானது இசை நாதமென்பது… முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசை என்றானது
ஆஹா… எண்ணத்தின் ராகத்தின் மின்சாரங்கள்
என் உள்ளே மௌனத்தின் சங்கமங்கள்…
இணைந்தோடுது… இசை பாடுது…
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
மீட்டும் எண்ணமே… சுவையூட்டும் வண்ணமே… மலர்ந்த கோலமே
ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே மனதின் பாவமே
ஆஹா… பருவ வயதின் கனவிலே பறந்து திரியும் மனங்களே
கவி பாடுங்கள் உறவாடுங்கள்
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்ப சுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக