வாராதிருப்பானோ வண்ண மலர்க் கண்ணன் அவன்
✨✨✨✨✨✨✨✨✨
படம்: பச்சை விளக்கு
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன்
P.சுசீலா
இசையமைப்பாளர்கள்
விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர்: கண்ணதாசன்
ஆண்டு: 1964
✨✨✨✨✨✨✨✨✨
குத்து விளக்கெரிய...
கூடமெங்கும் பூ மணக்க...
மெத்தை விரித்திருக்க
மெல்லியலாள் காத்திருக்க...
வாராதிருப்பானோ
வண்ண மலர்க் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ
சித்திரப் பூம் பாவை தன்னை
வாராதிருப்பானோ
வண்ண மலர்க் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ
சித்திரப் பூம் பாவை தன்னை
கண்ணழகு பார்த்திருந்து...
காலம் எல்லாம் காத்திருந்து...
பெண்ணழகை ரசிப்பதற்கு....
பேதை நெஞ்சம் துடி துடிக்க...
பேதை நெஞ்சம் துடி துடிக்க
வாராதிருப்பாளோ
வண்ண மலர்க் கன்னி அவள்
சேராதிருப்பாளோ
தென்னவனாம் மன்னவனை
பக்கத்தில் பழமிருக்க...
பாலோடு தேனிருக்க...
உண்ணாமல் தனிமையிலே
உட்கார்ந்த மன்னன் அவன்
உட்கார்ந்த மன்னன் அவன்
வாராதிருப்பானோ
வண்ண மலர்க் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ
சித்திரப் பூம் பாவை தன்னை
கல்வி என்று பள்ளியிலே...
கற்று வந்த காதல் மகள்...
காதலென்னும் பள்ளியிலே...
கதை படிக்க வருவாளோ...
கதை படிக்க வருவாளோ
வாராதிருப்பாளோ
வண்ண மலர்க் கன்னி அவள்
சேராதிருப்பாளோ
தென்னவனாம் மன்னவனை
வாராதிருப்பானோ
வண்ண மலர்க் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ
சித்திரப் பூம் பாவை தன்னை
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக