சின்ன சின்ன சொல்லெடுத்து

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : ராஜகுமாரன்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

பாடகி :  எஸ். ஜானகி

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

பெண் : சின்ன சின்ன

சொல்லெடுத்து சொந்தம்

சொல்ல நீ போ தூது சொன்ன

சொல்லில் குற்றமில்லை

சுத்தம் என்று நீ போய் கூறு

பெண் : சின்ன சின்ன

சொல்லெடுத்து சொந்தம்

சொல்ல நீ போ தூது சொன்ன

சொல்லில் குற்றமில்லை

சுத்தம் என்று நீ போய் கூறு

பெண் : தனியாக மாமன்

துணை தேடி வாட புரியாமல்

நானும் பரிகாரம் தேட

பெண் : சின்ன சின்ன

சொல்லெடுத்து சொந்தம்

சொல்ல நீ போ தூது சொன்ன

சொல்லில் குற்றமில்லை

சுத்தம் என்று நீ போய் கூறு

பெண் : கண்ணீர் கரைந்துருகும்

கன்னி மெழுகானேன் நானே

நீ பாரடி

பெண் : மன்னன் மனம் கலங்க

மண்ணில் சருகானேன் பூவே

நீ கூறடி

ஆண் : நித்திரையை நானும்

மூடி நித்தம் ஒரு கானம் பாடி

உத்தமியை தேடி தேடி கத்தும்

ஒரு வானம் பாடி

பெண் : உன்னுதட்டில்

பொய்யை வைத்து

முள்ளில் தைத்த

பூவாய் ஆனேன்

ஆண் : என் மனதில்

பாசம் வைத்து கல்லில்

செய்த தேராய் போனேன்

பெண் : அலை மேல்

படகாய் ஆனேன்

ஆண் : சின்ன சின்ன

சொல்லெடுத்து சொந்தம்

சொல்ல நீ போ தூது சொன்ன

சொல்லில் குற்றமில்லை

சுத்தம் என்று நீ போய் கூறு

ஆண் : சொல்லால் விளைந்ததிந்த

சொந்தக்கதை தானே

பூவே நீ கேளடி

ஆண் : பெண்ணே வருத்தமில்லை

நெஞ்சில் என்ன பாரம்

நீயே போய் கூறடி

பெண் : கன்னிமையை மீறும்

ஈரம் கன்னி இவள் சோகம்

போரும் வெண்ணிலவை

மூடும் மேகம் விட்டு

விலகாதோ தூரம்

ஆண் : வண்ணக்கிளி

போனபின்னே தன்னந்தனி

ஆனேன் நானே

பெண் : எண்ணி எண்ணி

ஆவதென்ன கண்கள்

உறங்காயோ மாமா

ஆண் : உயிர் போய்

உடலானேன்

ஆண் : சின்ன சின்ன

சொல்லெடுத்து சொந்தம்

சொல்ல நீ போ தூது சொன்ன

சொல்லில் குற்றமில்லை

சுத்தம் என்று நீ போய் கூறு

ஆண் : குயிலோடு சேரு

ஒரு பாட்டு கேளு அவள்

சோகம் தீர வழி நீயும்

பாரு

பெண் : சின்ன சின்ன

சொல்லெடுத்து சொந்தம்

சொல்ல நீ போ தூது சொன்ன

சொல்லில் குற்றமில்லை

சுத்தம் என்று நீ போய் கூறு

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்