இரவிங்கு தீவாய் நமை சூழுதே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:96

பாடியவர்கள்:சின்மயி ப்ரதீப் குமார்

இசை: கோவிந்த் வசந்தா

 வரிகள்: உமா தேவி

✨✨✨✨✨✨✨✨✨இரவிங்கு தீவாய் நமை சூழுதே

விடியலும் இருளாய் வருதே

நினைவுகள் தீயாய் அலை மோதுதே

உடலிங்கு சாவாய் அழுதே


பிரிவே உறவாய் கரைந்து போகிறேன்

உயிரின் உயிரை பிரிந்து போகிறேன்


மலைகளின் நதிபோல் மனம் வழிந்து வந்தாய்

வறண்டிடும் நிலத்தில் பல கடல்கள் தந்தாய்

கனவே துணையாய் ஒழிந்து போகட்டும்


இரவிங்கு தீவாய் நமை சூழுதே

விடியலும் இருளாய் வருதே

இந்த தாமரை குளம் மீறி தனி ஆகுதே

அதன் சூரியன் பகல் இன்றி வெயில் காயுதே

ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே

அட காலங்கள் தடைமீறி தடை போடுதே

நீ இன்றி நானே தினம் வாழ்வதொரு வாழ்வா

வாழ்வே வா நீ தான் உயிரின் உயிரே

வரவா… வரவா…


தினம் தினம் உயிர்த் தெழும்

மனம் அன்றாடம் மாயுமே

உயிர் வரை நிறைந் துனை

மனம் கொண்டாடி வாழுமே


மரங்கள் சாய்ந்து கூடு

வீழ்ந்தும் குயில்கள் ராகம் பாடுமே

இரவு தீர்ந்து ஓய்ந்த போதும்

நிலவு பொறுமை காக்குமே


மழை வழி கடல் விடும்

விண்காதல் மண்ணை சேருமே

உனை உடல் பிரிந்தினும்

என் காதல் உன்னை சேர்ந்து வாழுமே

நீ போய் வா வா வா


✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்