சென்னிக் குளநகர் வாசன் தமிழ் தேறும் அண்ணாமலை தாசன்

 ✨✨✨✨✨✨✨✨✨

காவடிச் சிந்து

வரிகள்:அண்ணாமலை ரெட்டியார்

பாடியவர்: உன்னி க்ருஷ்ணன்

✨✨✨✨✨✨✨✨✨

சென்னிக் குளநகர் வாசன் தமிழ் தேறும் அண்ணாமலை தாசன் செப்பும்

ஜகமெச்சிய மதுரக்-கவியதனைப்- புயவரையில் புனை தீரன் அயில் வீரன்

2. வண்ண மயில் முருகேசன் குறவள்ளிப் பதம் பணி நேசன் உறை

வரமே தரு கழுகாசல பதி கோயிலின் வளம் நான் மறவாதே சொல்வன் மாதே

3.கோபுரத்துத்-தங்கத்- தூவி தேவர் கோபுரத்துக்-கப்பால் மேவி கண்கள்

கூசப் ப்ரகாசத்தொளி மாசற்று விலாசத்தோடு குலவும் புவி பலவும்

4. நூபுரத்துதொளி வெடிக்கும் பத நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் அங்கே

நுழைவாரிடுமுழவோசைகள் திசை மாசுணம் இடியோவென நோக்கும்படித்  தாக்கும்

5. சன்னிதியில் துஜத்தம்பம் விண்ணில் தாவி வருகிற கும்பம் எனும்

சலராசியை வதிவார் பல கொடி சூடிய முடி மீதிலே தாங்கும் உயர்ந்தோங்கும்

6. உன்னதமாகிய இஞ்சி பொன்னாடும்பர் நகருக்கு மிஞ்சி மிக

உயர்வானது பெறலால் அதில் அதி சீதள புயல் சாலவும் உறங்கும் மின்னிக் கரக்கும்

7. அருணகிரி நாவில் பழக்கம் தரும் அந்தத் திருப்புகழ் முழக்கம் பல

அடியார் கணம் மொழி போதினில் அமராவதி இமையோர் செவி அடைக்கும் அண்டம் உடைக்கும்

8. கருணை முருகனைப்-போற்றித்- தங்கக் காவடித் தோளின் மேல் ஏற்றிக் கொழும்

கனலேறிய மெழுகாய்  வருபவர் எவரும் இஹமே கதி காண்பார் இன்பம் பூண்பார்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்