தோள் மீது தாலாட்ட என் பச்சக் கிளி நீ தூங்கு தாய் போலத் தாலாட்ட
✨✨✨✨✨✨✨✨✨
படம்:என் தங்கை கல்யாணி
ஆண்டு:1988
பாடியவர்:S.P.B&K.S.சித்ரா
இசை:T.R
✨✨✨✨✨✨✨✨✨
ம்ஹும் ம்ஹும்..
தோள் மீது தாலாட்ட
என் பச்சக் கிளி நீ தூங்கு
தாய் போலத் தாலாட்ட
என் தங்கமே நீ தூங்கு
நிலவக் கேட்டா புடிச்சுத்
தருவேன் மாமன்
உலகக் கேட்டா வாங்கித்
தருவேன் மாமன்
✨
தோள் மீது தாலாட்ட
என் பச்சக் கிளி நீ தூங்கு
தாய் போலத் தாலாட்ட
என் தங்கமே நீ தூங்கு
✨
மண்ணுக் குதிர அவனை நம்பி
வாழ்க்கையென்னும் ஆற்றில் இறங்க
அம்மா நெனச்சாடா
உன் மாமன் தடுத்தேண்டா
✨
வார்த்தை மீறி போனாப் பாரு ஓ...
வார்த்தை மீறி போனாப் பாரு
✨
வாழ்க்கை தவறி நின்னா கேளு
மனசு பொறுக்கலடா
என் மானம் தடுக்குதடா
✨
தங்க ரதமே தூங்காயோ
தாழம் மடலே தூங்காயோ
முத்துச் சரமே தூங்காயோ
முல்லைவனமே தூங்காயோ
✨
நெருப்பு தொட்டா சுடுமே என்று
சின்ன வயதில் அண்ணன் தடுக்கும்
மீறித் தொட்டேன் நான்
கதறி அழுதேன் நான்
✨
ஓடிவந்து அண்ணன் பார்க்கும் ஓ...ஓ
ஓடிவந்து அண்ணன் பார்க்கும்
✨
தவற மறந்து மருந்து போடும்
இப்போ நெருப்ப தொட்டேன் அதை
பார்க்க யாரும் இல்லை
✨
தோள் மீது தாலாட்ட
என் பச்சக் கிளி நீ தூங்கு
தாய் நெஞ்சம் தாலாட்ட
என் தங்கமே நீ தூங்கு
✨
நிலவக் கேட்டா புடிச்சுத்
தருவேன் மாமன்
உலகக் கேட்டா வாங்கித்
தருவேன் மாமன்
✨
தங்க ரதமே தூங்காயோ
தாழம் மடலே தூங்காயோ
முத்துச் சரமே தூங்காயோ
முல்லைவனமே தூங்காயோ
✨
ஆரிராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆரிராரோ
✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக