கனியக் கனிய மழலை பேசும் கண்மணி - உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
✨✨✨✨✨✨✨✨✨
படம்:மன்னாதி மன்னன்
இசை:M.S.விஸ்வநாதன்-ராமமூர்த்தி
ஆண்டு:1960
வரிகள்:கண்ணதாசன்
பாடியவர்கள்:T.M.S & P.சுசீலா
✨✨✨✨✨✨✨✨✨
கனியக் கனிய மழலை பேசும் கண்மணி -
உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா -
எந்தன்காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா
✨
சித்திரத் தோகை செவ்விதழ்க் கோவை சேதி சொல்லாதோ -
இந்தப்பத்தரை மாற்றுப் பாவை மேனி பந்தயமாகாதோ
இந்த அழகு வெள்ளமே என்றும் உங்கள் சொந்தமே -
புதுப்பண்பாடும் தமிழமுதம் கலந்து கொஞ்சவே
✨
கனியக் கனிய மழலை பேசும் கண்மணி -
உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா -
எந்தன்காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா
✨
காலம் எனும் கடலினிலே கன்னி உங்கள் அருகினிலே
கனிந்தே வருவேன் இனி தென்றல் என்னும் தேரினிலே
அருகினில் நீ இருந்தால் ஆசையும் குறைவதுண்டோ -
அமுதேஎன் வாழ்வினில் வளரும் இன்பமே
✨
கனியக் கனிய மழலை பேசும் கண்மணி -
உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா -
எந்தன்காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா
✨
அற்புத ஓவியம் கண்கள் கற்றது எப்படியோ -
உயர்செந்தமிழ் ஓவியர் நெஞ்சில் கொஞ்சிடும் கற்பனையோ
மாந்தளிர் போலும் எழில்மேனி
மின்னுவதெப்படியோ..
உம்..............உம்...............
நல்லமுதே என் வாழ்வினில் வளரும் இன்பமே
✨
நீலவானும் நிலவும் போல கூடுவோம் -
நல்இன்பம் என்னும் படகிலேறி ஆடுவோம்
ஆ....ஆ....ஆ...ஆ...
✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக