புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல்
✨✨✨✨✨✨✨✨✨
படம்: என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்
பாடகர்: P.ஜெயச்சந்திரன்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: பிறைசூடன்
✨✨✨✨✨✨✨✨
புல்லைக் கூட பாட
வைத்த புல்லாங்குழல்
இந்த கல்லைக்கூட
வணங்கவைத்த கலை தேவதை
ஜீவன் தந்தாளே
என் வாழ்வில்....
பூஜை செய்தேனே நெஞ்சோடு...
புல்லைக் கூட பாட
வைத்த புல்லாங்குழல்
இந்த கல்லைக்கூட
வணங்கவைத்த கலை தேவதை
✨
எங்கே சென்றாலும் ஓர் துணையானது
ஏனோ எனக்குள்ளே அதன் குரல் கேட்குது
அலை நீரில் ஆடும் நிலவைத் தொட
மனம் அலைபாயும்
என் மீது ஒளியும் பட
தொடர்ந்து வந்த நிழல் அது...
எனக்கு நல்ல துணை அது..
தேவார வகை நானும் பாட..
ஆதாரம் எதுவென்று கூற..
ஊமை பாடும் பாடல்
எனது உள்ளம் சொன்னது
இந்த புல்லைக் கூட பாட
வைத்த புல்லாங்குழல்
இந்த கல்லைக்கூட
வணங்கவைத்த கலை தேவதை
✨
கேள்வி என்றாலே ஒரு பதில் வேண்டுமே
கேட்டாலும் தரவே நல்மனம் வேண்டுமே
வீணை என்றாலே ஒரு விரல் மீட்டத்தான்
நாதம் வந்தாலே நல்சுகம் கூட்டத்தான்
நெருங்கினேனே நினைவில்..தான்
நினைப்பில் தானே வாழ்கிறே..ன்
உன் பார்வை பட்டால் வசந்தம்...
உன் கைகள் தொட்டால் சுகந்தம்..
ராகம் உனது தாளம்
உனது பொருளும் நீயம்மா
✨
இந்த புல்லைக் கூட பாட
வைத்த புல்லாங்குழல்
இந்த கல்லைக்கூட
வணங்கவைத்த கலை தேவதை
ஜீவன் தந்தாளே
என் வாழ்வில்...
பூஜை செய்தேனே நெஞ்சோடு...
புல்லைக் கூட பாட
வைத்த புல்லாங்குழல்
இந்த கல்லைக்கூட
வணங்கவைத்த கலை தேவதை
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக