புஞ்சை உண்டு நஞ்சை உண்டு

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: உன்னால் முடியும் தம்பி

பாடல்: புலமைப்பித்தன்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியன்

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : தந்தன் னானா

தந்தன் னானா

தந்தன் னானா

தானா….


ஆண் : ஹோய் தந்தன் னானா

தந்தன் னானா

தந்தன் னானா

தந்தன் னானா…..


ஆண் : புஞ்சை உண்டு நஞ்சை உண்டு

பொங்கி வரும் கங்கை உண்டு

பஞ்சம் மட்டும் இன்னும்

இங்கு மாறவில்லே

எங்க பாரதத்தின்

சோத்துச் சண்டை தீரவில்லே


ஆண் : வீதிக்கொரு கட்சி உண்டு

சாதிக்கொரு சங்கம் உண்டு

நீதி சொல்ல மட்டும்

இங்கு நாதி இல்லே

சனம் நிம்மதியா

வாழ ஒரு நாளுமில்லே


ஆண் : {இது நாடா இல்லே

வெறும் காடா

இதக் கேக்க யாரும்

இல்லே தோழா} (2)


ஆண் : புஞ்சை உண்டு நஞ்சை உண்டு

பொங்கி வரும் கங்கை உண்டு

பஞ்சம் மட்டும் இன்னும்

இங்கு மாறவில்லே

எங்க பாரதத்தின்

சோத்துச் சண்டை தீரவில்லே


ஆண் : வானத்தை எட்டி நிற்கும்

உயர்ந்த மாளிகை

யாரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது

ஊருக்குப் பாடுபட்டு

இளைத்த கூட்டமோ

வீடின்றி வாசலின்றித் தவிக்குது


ஆண் : எத்தனை காலம்

இப்படிப் போகும்

என்றொரு கேள்வி நாளை வரும்

உள்ளவை எல்லாம்

யாருக்கும் சொந்தம்

என்றிங்கு வாழும் வேளை வரும்


ஆண் : ஆயிரம் கைகள் கூடட்டும்

ஆனந்த ராகம் பாடட்டும்

நாளைய காலம் நம்மோடு

நிச்சயம் உண்டு போராடு

வானகமும் வையகமும்

எங்கள் கைகளில் என்றாடு


ஆண் : புஞ்சை உண்டு நஞ்சை உண்டு

பொங்கி வரும் கங்கை உண்டு

பஞ்சம் மட்டும் இன்னும்

இங்கு மாறவில்லே

எங்க பாரதத்தின்

சோத்துச் சண்டை தீரவில்லே


ஆண் : ஆத்துக்குப் பாதை இங்கு

யாரு தந்தது

தானாகப் பாதை கண்டு நடக்குது

காத்துக்குப் பாட்டுச் சொல்லி

யாரு தந்தது

தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது


ஆண் : எண்ணிய யாவும்

கைகளில் சேரும்

நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே

காலையில் தோன்றும்

சூரியன் போலே

பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே


ஆண் : சேரியில் தென்றல் வீசாதா

ஏழையை வந்து தீண்டாதா

கங்கையும் தெற்கே பாயாதா

காவிரியோடு சேராதா

பாடுபடும் தோழர்களின்

தோள்களில் மாலை சூடாதா


ஆண் : புஞ்சை உண்டு நஞ்சை உண்டு

பொங்கி வரும் கங்கை உண்டு

பஞ்சம் மட்டும் இன்னும்

இங்கு மாறவில்லே

எங்க பாரதத்தின்

சோத்துச் சண்டை தீரவில்லே


ஆண் : {இது நாடா இல்ல

வெறும் காடா

இத கேக்க யாரும்

இல்லே தோழா} (2)

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்