ரோஜாக் கடலே என் ராஜா மகளே என் ஆசைக் கனியே வா தனியே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: அனேகன் 

இசை: ஹாரிஸ் ஜெயராஜ் 

ஆண்டு: 2014 

பாடியவர்கள்: சின்மயி சங்கர் மகாதேவன் 

வரிகள்: வைரமுத்து 

✨✨✨✨✨✨✨✨✨

ரோஜாக் கடலே என் ராஜா மகளே

என் ஆசைக் கனியே வா தனியே

காதல் துணையே என் கண்ணின் மணியே

என் இன்னோர் உயிரே வா அருகே

பூக்களின் பிள்ளாய் புன்னகைக் கிள்ளாய்

பொன்னில் வார்த்தது மேனி

ம்........

பூச்செடியின் மேலே காற்றடித்தாலும்

உன் நெஞ்சில் தைக்குமோ ஆணி

வா வா அலைகடல் சிறுதுளி வா வா

பெண்ணே வா வா எரிமலை சிறு பொறி வா வா

வா வா அலைகடல் சிறுதுளி வா வா

கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா

உளி கொண்டு எய்தாலும் ஒளி என்றும் தேயாது

அதுபோல் நம் காதல் மானே

ரோஜாக் கடலே என் ராஜா மகளே

என் ஆசைக் கனியே வா தனியே

காதல் துணையே என் கண்ணின் மணியே

என் இன்னோர் உயிரே வா அருகே

செவ்வாய்க் குயிலே பொன் செவ்வேல் விழியே

என் செவ்வால் கிளியே வா வெளியே

நீர் வார் குழலே கண் நேர்காண் எழிலே

என் மார்மேல் மயிலே வா வெளியே

வாட் படை கொண்டு தாக்கிய போதும்

வானம் வளைவதும் இல்லை

நாற் படைக் கொண்டு ஆர்ப்பரித்தாலும்

வேட்கை அழிவதும் இல்லை

போவோம் நிலம் விட்டு நிலவுக்கு

போவோம்

இனி வாழ்வோம் உயிருக்கு உயிர் தந்து வாழ்வோம்

கண்டங்கள் பிண்டாலும் அண்டங்கள் விண்டாலும்

நெஞ்சங்கள் மாறாது வா வா

செவ்வாய் குயிலே பொன் செவ்வேல் விழியே

என் செவ்வால் கிளியே வா வெளியே

நீர் வார் குழலே கண் நேர்காண எழிலே

என் மார்மேல் மயிலே வா வெளியே

பருவச்சிட்டே பவள திட்டே

இதழைத் தந்தால் எதையும் தருவேன்

புகழும் ஐயா புழுகு பையா

சிறு போர் வந்தால் என்னை மறப்பாய்


வில்லும் அம்பும் சேர்ந்தாலும்

சேர்ந்தே வாழ்வதும் இல்லை

சொல்லும் பொருளும் ஆனோமே

என்றும் பிரிவே இல்லை

வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா

பெண்ணே வா வா எரிமலை சிறு பொறி வா வா

வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா

கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா


கண்டங்கள் பிண்டாலும் அண்டங்கள் விண்டாலும்

நெஞ்சங்கள் மாறாது வாவா.

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்