ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
✨✨✨✨✨✨✨✨
பாடல்: ஆயர்பாடி மாளிகையில்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
✨✨✨✨✨✨✨✨✨
வரிகள்:
ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய்னிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்துத் தூங்குகின்றான் தாலேலோ
ஓய்வெடுத்துத் தூங்குகின்றான் தாலேலோ
(ஆயர்பாடி)
✨
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன்போல் லீலை செய்தான் தாலேலோ(2)
அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
(ஆயர்பாடி)
✨
நாகப்பதம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ - (2)
அவன்
மோகநிலை கூட ஒரு யோகநிலை போல் இருக்கும்
யார் அவனைத் தூங்க விட்டார் ஆராரோ
யார் அவனைத் தூங்க விட்டார் ஆராரோ( ஆயர்பாடி)
✨
கண்ணன் அவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ (2)
அவன்
பொன்னழகைப் பார்ப்பதற்கும் போதைமுத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
(ஆயர்பாடி)
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக