எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
✨✨✨✨✨✨✨✨✨
படம் : இசை பாடும் தென்றல்
பாடலாசிரியர் : வாலி
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகி
இசை : இளையராஜா
✨✨✨✨✨✨✨✨✨
ஆண் : எந்தன் கைக்குட்டையை
யார் எடுத்தது
அன்புக் காதலின் சின்னமாய்
எந்தன் காதலி தந்தது
✨
ஆண் : எந்தன் கைக்குட்டையை
யார் எடுத்தது
எந்தன் கைக்குட்டையை
யார் எடுத்தது
அன்புக் காதலின் சின்னமாய்
எந்தன் காதலி தந்தது
அன்புக் காதலின் சின்னமாய்
எந்தன் காதலி தந்தது
✨
ஆண் : எந்தன் கைக்குட்டையை
யார் எடுத்தது
நீயா நீயா நீயா நீயா
✨
பெண் : ஆ…ஆஆ…..ஆ…..ஆ……ஆ…
சின்னச் சின்ன நூல்களில்
பூக்கள் வரைந்தேன் ஆஹா
என்னை வைத்து நான் அதில்
பின்னி இருந்தேன்
✨
ஆண் : கைக்குட்டையில் சின்னம் ஒன்று
கண்டு பிடித்தேன்
பின்னி வைத்த பூவுக்கு
முத்தம் கொடுத்தேன்
✨
பெண் : காதல் இதயம்
தந்து முடித்தேன்
கண்ணின் இமையால் தந்தி அடித்தேன்
✨
ஆண் : பின்னி முடித்த
நூல்களுக்குள் நான்
சிக்கித் தவித்தேன்
சிக்கித் தவித்தேன்
சிக்கல் எடுத்தேன்
✨
ஆண் : எந்தன் கைக்குட்டையை
யார் எடுத்தது
அன்புக் காதலின் சின்னமாய்
எந்தன் காதலி தந்தது
அன்புக் காதலின் சின்னமாய்
எந்தன் காதலி தந்தது
✨
ஆண் : எந்தன் கைக்குட்டையை
யார் எடுத்தது
நீயா நீயா நீயா நீயா
✨
ஆண் : கைக்குட்டையில் வேர்வையை
துடைத்ததில்லை
அதற்கு வலித்திடும் என்று நான்
மடித்ததில்லை
✨
பெண் : உந்தன் கையில் தந்தது
துணியும் இல்லை
என் இதயத்தைத்தான் தந்தேன்
வழியும் இல்லை
✨
ஆண் : உன்னை நினைத்தால்
உறக்கம் இல்லை
இன்பக் கிளியே இரக்கம் இல்லை
✨
பெண் : வாய் திறந்து
என் பெண்மை சொல்வது
வழக்கம் இல்லை
பழக்கம் இல்லை விளக்கம் இல்லை
✨
பெண் : அந்தக் கைக்குட்டையை
யார் எடுத்தது
அன்புக் காதலின் சின்னமாய்
இந்தக் காதலி தந்தது
அன்புக் காதலின் சின்னமாய்
இந்தக் காதலி தந்தது
✨
பெண் : அந்தக் கைக்குட்டையை
யார் எடுத்தது
நான்தான் நான்தான்
நான்தான் நான்தான்
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக