கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:தென்றலே என்னைத் தொடு 

இசை:இளையராஜா

பாடியவர்:S.P.B

வரிகள்:வாலி

ஆண்டு:1985

✨✨✨✨✨✨✨✨✨

ஹேய் ரப்பபபாப்பா

ஹேய் ஹேய் ரப்பபபாப்பா

ரப்பபபாப்பா ரப்பபபா ரப்பபபா

கவிதை பாடு குயிலே குயிலே

இனி வசந்தமே

இளமை ராகம் இதுவே இதுவே

மிக இனிமையே

உதயமானதே புதிய கோலமே

விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே

நான் நினைத்த திரு நாள் ஒரு நாள்

இது தானே

கவிதை பாடு குயிலே குயிலே

இனி வசந்தமே

இளமை ராகம் இதுவே இதுவே

மிக இனிமையே

நூறு வண்ணங்களில் சிரிக்கும்

பனி தூங்கும் புஷ்பங்களே

ஆசை எண்ணங்களில் மிதக்கும்

அடியேனை வாழ்த்துங்களேன்

வான வெளியில்

வலம் வரும் பறவை

நானும் அது போல்

எனக்கென்ன கவலை

காற்று என் பக்கம் வீசும் போது

காலம் என் பேரைப் பேசும் போது

வாழ்வு எனது வாசல் வருது

நேரம் இனிதாக யாவும் சுகமாக

கவிதை பாடு குயிலே குயிலே

இனி வசந்தமே

இளமை ராகம் இதுவே இதுவே

மிக இனிமையே

உதயமானதே புதிய கோலமே

விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே

நான் நினைத்த திரு நாள் ஒரு நாள்

இது தானே

கோவில் சிற்பங்களைப் பழிக்கும்

அழகான பெண் சித்திரம்

கோடி மின்னல்களில் பிறந்து

ஒளி வீசும் நட்சத்திரம்

கூட எனது

நிழலென வருமோ

நாளும் இனிய

நினைவுகள் தருமோ

பாவை கண் கொண்ட பாசம் என்ன

பார்வை சொல்கின்ற பாடம் என்ன

நீல மலராய் நேரில் மலர

நாளும் தடுமாற நெஞ்சம் இடம் மாற

கவிதை பாடு குயிலே குயிலே

இனி வசந்தமே

இளமை ராகம் இதுவே இதுவே

மிக இனிமையே

உதயமானதே புதிய கோலமே

விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே

நான் நினைத்த திரு நாள் ஒரு நாள்

இது தானே

கவிதை பாடு குயிலே குயிலே

இனி வசந்தமே

இளமை ராகம் இதுவே இதுவே

மிக இனிமையே

ரப்பபபாப்பா பாப்பா பாப்பா

பாப்பாபா

ரப்பபபாப்பா பா பா பா பா பாபா

பாபாபாபாபா

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்