பேசாதே பார்வைகள் வீசாதே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:திருடன் போலீஸ்

வருடம்:2014

இசை:யுவன்

வரிகள்: நா.முத்துக்குமார்

பாடகர்கள்: ஹரிஹரசுதன்,

பூஜா வைத்யனாத்

✨✨✨✨✨✨✨✨✨

ஆண்: பேசாதே

பார்வைகள் வீசாதே

வேறென்ன மொழி வேண்டும்

மௌனமே போதாதா

பெண்: நெருங்காதே

நெருங்கியே விலகாதே

வேறென்ன இனி வேண்டும்

மௌனமே போதாதா

ஆண்: என் நெஞ்சில் வந்தே

என்னென்ன செய்தாய்

மிதக்கிறேன் காற்றாக

பெண்: உன் பேரை தானே

என் நெஞ்சில் இன்று

இசைக்கிறேன் பாட்டாக

ஆண்: பேசாதே

பார்வைகள் வீசாதே

வேறென்ன மொழி வேண்டும்

மௌனமே போதாதா

ஆண்: கண்ணில் உன்னை

அளந்தது கொஞ்சம்

கண்ணை மூடி

ரசித்தது கொஞ்சம்

ஆண்: இன்னும் என்ன சொல்ல

அன்பே தெரியாமல்

நான் தவித்தேனே

பெண்: உன்னால் என்னை

இழந்தது கொஞ்சம்

உன்னால் என்னை

அடைந்தது கொஞ்சம்

பெண்: இன்னும் என்ன சொல்ல

அன்பே புரியாமல்

நான் துடித்தேனே

ஆண்: காதல் என்று சொன்னால்

நீண்ட மயக்கம் இன்று புரிகின்றதே

பெண்: உன்னால் எந்தன் பெண்மை

புதிய தயக்கம் இன்று அறிகிறதே

ஆண்: நீ என்ன சொல்ல

நான் என்ன சொல்ல

வார்த்தைகள் தேவைதானா

பெண்: நீ என்னை வெல்ல

நான் உன்னை வெல்ல

ஆனாலும் இந்த காதல்

போரின் யுத்தம் அடங்காதே

ஆண்: பேசாதே

பார்வைகள் வீசாதே

வேறென்ன மொழி வேண்டும்

மௌனமே போதாதா

பெண்: நெருங்காதே

நெருங்கியே விலகாதே

வேறென்ன இனி வேண்டும்

மௌனமே போதாதா

ஆண் : எங்கே எங்கே

தொலைந்தது நெஞ்சம்

பெண்ணே பெண்ணே

சொல்லிவிடு கொஞ்சம்

உன்னை நம்பி விட்டு

வந்தேன் நலம்தானா

என் இதயம் அங்கே

பெண் : அங்கே அங்கே

என்னோடய நெஞ்சம்

உன்னிடத்தில் வந்திருக்கும்

தஞ்சம் கண்ணில் வைத்து

காவல் செய்தாய் என்றதடா

உன் இதயம் இங்கே

ஆண் : தேகம் இரண்டு

ஆனால் இதயம் ஒன்று

இங்கு துடிக்கிறதே

பெண் : தூரம் தள்ளி

நின்றும்சுவாச காற்று

நம்மை இணைக்கிறதே

ஆண் : நீ என்ன

சொல்லநான் என்ன

சொல்ல வார்த்தைகள்

தேவைதானா

பெண் : நீ என்னை

வெல்லநான் உன்னை

வெல்ல ஆனாலும் இந்த

காதல் போாின் யுத்தம் அடங்காதே

ஆண் : பேசாதே

பார்வைகள் வீசாதே

வேறென்ன மொழி

வேண்டும் மௌனமே

போதாதா

பெண் : நெருங்காதே

நெருங்கியே விலகாதே

வேறென்ன இனி வேண்டும்

மௌனமே போதாதா

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்