மல்லியே சின்ன முல்லையே
✨✨✨✨✨✨✨✨✨
படம்: பாண்டிதுரை
ஆண்டு:1992
பாடகர்கள் : மனோ, ஸ்வர்ணலதா
இசை:இளையராஜா ✨✨✨✨✨✨✨✨✨
ஆண் : தன்னன்னா தினம்
தன்னன்னா தினம்
தன்னன் நன்னன் னா
பெண் : தன்னன்னா தினம்
தன்னன்னா தினம்
தன்னன் நன்னன் னா
ஆண் : தன்னான தனா
தன்னான தனா னா ஹோ….
இருவர் : தன்னன்னா தினம்
தன்னன்னா தினம்
தன்னன் நன்னன் னா
✨
ஆண் : மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே…….
அல்லியே இன்ப வல்லியே
எந்தன் அருமருந்தே…….
வண்டாடும் மலர்ச்
செண்டாடும் குழலாடும் ஓ….
✨
பெண் : மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே……
அல்லியே இன்ப வல்லியே
உந்தன் அருமருந்தே……
✨
பெண் : மாலைக்கும் தாலிக்கும்
வந்தது யோகம்
ஆண் : ஆஹா ஹா ஆஹா ஹா
காலைப் பொன் மேகங்கள்
மந்திரம் கூறும்
பெண் : ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்
பெண் : சேலைக்குள் சோலைப் பூ வாசம்
சேர்ந்திடும் மாசம் தை மாசம்
ஆண் : வேளைக்கு வேளை உன் மோகம்
விட்டு விடாமல் கை கூடும்
பெண் : ஆனந்த வேகத்தில்
நான் வந்த நேரத்தில்
ஆடி வரும் குளிர்க் காற்றே
ஆண் : பூவென்ற தேகத்தில்
நான் நின்ற கோலத்தில்
பாடி வரும் புது ஊற்றே
பெண் : நீராடும் உடல் போராடும்
உனைத் தேடும் ஓ…
ஆண் : மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே
பெண் : அல்லியே இன்ப வல்லியே
உந்தன் அருமருந்தே
பெண் : சொக்கி நின்றாள் இந்த
சொக்கனின் மீனாள்
ஆண் : ஆஹா ஆஹா ஆஹா ஹா
சூடிக் கொண்டாள் என்னை
சொர்க்கத்தில் ஆண்டாள்
பெண் : ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்
பெண் : வாரிக் கொண்டடும் கண் ஜாடை
வஞ்சி நீராடும் பொன்னோடை
ஆண் : கோதை பொன் மேனி பூ மேடை
மேடைக்கு நான்தான் பொன்னாடை
பெண் : நீ தொட்ட பாகங்கள்
தேன் மொட்டு போலன்று
தேடியதால் கனியானேன்
ஆண் : வாய்விட்டு நானொன்று
கேட்கின்றேன் தாவென்று
பாய் விரித்தேனடி! மானே
பெண் : அங்கங்கள் பசும் தங்கங்கள்
அள்ளும் நேரம் வா……..
ஆண் : மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே……
பெண் : அல்லியே இன்ப வல்லியே
உந்தன் அருமருந்தே…….
ஆண் : வண்டாடும் மலர்ச்
செண்டாடும் குழலாடும் ஓ……..
பெண் : மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே……
ஆண் : அல்லியே இன்ப வல்லியே
எந்தன் அருமருந்தே ஏ…
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக