கனகதாரா ஸ்தோத்திரம்
1. அங்கம் ஹரே:புலக பூஷணமாச்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகுலாபரணம் தமாலம்|
அங்கீக்ருதாகில விபூதிரபாங்க லீலா
மாங்கல்யதாஸ்து மம மங்கல தேவதாயா:||
✨
மொட்டுக்களால் அழகிய தமாலமரத்தை பெண் வண்டு சுற்றித்தவழ்வது போல் ரோமாஞ்சமெய்திய ஸ்ரீஹரியின் மார்பில் தவழும் மங்கல தேவதையான லக்ஷ்மி தேவியின் கடைக்கண் அழகு - அது அனைவருக்கும் ஐச்வர்யத்தை நல்குவது - எனக்கு மங்களம் தருவதாகுக !
✨
2. முக்தா முஹூர்:விதததீ வதனே முராரே:
ப்ரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி|
மாலா த்ருசோ:மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரீயம் திசது ஸாகரஸம்பவாயா:||
✨
மலர்ந்து பரந்த உத்பல புஷ்பத்தில் தேன் வண்டு போல் முராரியான நாராயணனுடைய முகத்தில் ப்ரேமையுடனும், வெட்கத்துடனும் மெல்ல மெல்லப் போவதும் வருவதுமான லக்ஷ்மி தேவியின் கடைக்கண்தொடர் எனக்கு ஐச்வர்யத்தை கொடுக்கட்டும்.
✨
3.ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
ஆனந்த கந்த மநிமேஷ மனங்கதந்த்ரம்||
ஆகேரஸ்தித கநீநிக பக்ஷநேத்ரம்
பூத்யை பவேத் மம புஜங்கசயாங்கநாயா:||
✨
சற்றே மூடிய கண்களையுடயை முகுந்தனை மகிழ்ச்சியுடன் அடைந்து - (ஆனந்தத்தின் மூலகாரணமாயும் மறைவில்லாததுமான காம சாஸ்திரமயமாகியவர் அவர்) சற்று சாய்வாக நிற்கும் கருவிழியும், இமையும் கொண்ட லக்ஷ்மி தேவியின் கண் எனக்கு ஐச்வர்யத்தை பயக்கட்டும்.
✨
4.பாஹ்வந்தரே மதுஜித:ச்ரித கௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி|
காமப்ரதா பகவதோபி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹதுமே கமலாலயாயா:||
✨
மஹாவிஷ்ணுவின் கௌஸ்துபம் கொண்ட மார்பில் இந்திர நீல மணி ஹாரம் போல் விளங்குவதும், பகவானுக்கே காமத்தை கொடுப்பதுமான லக்ஷ்மி தேவியின் கடைக்கண் தொடர் எனக்கு மங்களத்தை உண்டாக்கட்டும்.
✨
5.காலாம்புதாலிலலிதோரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதியா தடிதங்கனேவ|
மாது:ஸம்ஸ்தஜகதாம் மஹனீயமூர்த்தி:
பத்ரானி மே திசது பார்கவந்தனாயா:||
✨
கைடபனை வதைத்த மஹாவிஷ்ணுவின் கரூநீல மேகம் போன்ற சீரிய மார்பில், மேகத்தின் மேல் விளங்கும் மின்னல் கொடி போல் பிரகாசிக்கின்றதே ஜகன் மாதாவின் மேன்மை தங்கிய வடிவம், அது எனக்கு மங்களங்களைக் கொடுக்கட்டும்.
✨
6. ப்ராப்தம் பதம் ப்ரதமத:கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்யபாஜி மதுமாதினி மன்மதே ந|
மய்யாபதேத் ததிஹ மந்தரமீக்ஷணார்தம்
மந்தாலஸ ம் ச மகராலய கன்ய காயா:||
✨
பாற்கடலின் மகளான மஹாலக்ஷ்மியின் மேலான கடைக்கண் என்மேல் சிக்கெனப் பதியட்டும். அதன் வலிமையாலன்றோ மன்மதன், முதலில் மதுவரக்கனை வீழ்த்திய மஹாவிஷ்ணுவின் இடத்தில் இடம் பெற்றான்.
✨
7.விச்வாமரேந்த்ர பதவிப்ரம தானதக்ஷம்
ஆனந்த ஹேது ரதிகம் முரவித்விஷோபி|
ஈஷந்நிஷீதது மயி க்ஷண மீக்ஷணார்தம்
இந்தீவரோதரஸஹோதரமிந்திராயா:||
✨
எல்லா தேவர்களுக்கும் தலைமையான - இந்த பதவியை - கொடுக்க வல்லதும், ஸ்ரீமந் நாராயணனுக்கும் அது மகிழ்ச்சியைக் கொடுப்பதும், நீல ஆம்பல பூ போன்றதுமான லக்ஷ்மி தேவியின் அரைக்கண் பார்வை என்னிடம் நொடியாகிலும் நிலை பெறட்டுமே!
✨
8.இஷ்டாவிசிஷ்டமதயோபி யயா தயார்த்ர -
த்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸுலபம் லபந்தே|
த்ருஷ்டி: ப்ரஹ்ருஷ்டகமலோகரதீப்திரிஷ்டாம்
புஷ்டீம் க்ருஷீஷ்ட மம புஷ்கரவிஷ்டராயா:||
✨
சாதாரண புத்திமான்களும் தயைததும்பும் எந்தக்கண் பார்வையால் மூவுலகத்தலைமைப் பதவியை கூட சுலபமாக பெறுகின்றனரோ, அந்த மலர்ந்த தாமரை மலரையத்த பார்வை- தாமரைமலரில் வீற்றிருக்கும் மஹாலக்ஷ்மியின் பார்வை - என் விருப்பத்தை நிறைவேற்றட்டும்.
✨
9.தத்யாத்தயானுபவனோ த்ரவிணாம்புதாராம்
அஸ்மின் அகிஞ்சன விஹங்கசிசௌ விஷண்ணே|(2)
துஷ்கர்மகர்மமபநீய சிராய தூரம்
நாராயணப்ரணயினீ நயனாம் புவாஹ:||
✨
ஸ்ரீ நாராயணரின் ப்ரியையான லக்ஷ்மியின் கடாக்ஷம் என்ற கார்மேகம் தயவு என்ற காற்றுத் துணையுடன், வெகு நாள் செய்த பாபமாகிய கோடையை நீக்கி பணமாகிய நீர்மழையை இந்த ஏழை சாதகக்குஞ்சின் மேல் பொழியட்டும்.
✨
10.கீர்தேவதேதி கருடத்வஜஸுந்தரீதி
சாகம்பரீதி சசிசேகர வல்லபேதி|
சிருஷ்டிஸ்திதி ப்ரலய கேலிஷு ஸம்ஸ்திதாயை
தஸ்யை நம:த்ரிபுவணே குரோஸ் தருண்யை ||
✨
மூன்று உலகங்களுக்கும் ஒரே நாயகரான பரமேச்வரனுக்கு உலகை ஆக்கவும், நிலைபெறச் செய்யவும் அழிக்கவும் ஆன விளையாட்டில் உடனிருக்கும் பத்நியாக ஸரஸ்வதீ எனவும், சாகம்பரீ எனவும், சந்திரசேகரரின்பிரியை எனவும் விளிக்கப்பட அவ்வன்னைக்கு நமஸ்காரம்.
✨
11. ஸ்ருத்யை நமோஸ்து சுபகர்மபலப்ரஸ¨
ரத்யை நமோஸ்து ரமணீய குணர்ணவாயை||
சக்த்யை நமோஸ்து சதபத்ர நிகேதநாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை||
✨
நாம் செய்த நற்செயல்களின் பயனைக் கொடுக்கும் சுருதி என்று அறியப்படுபவளுக்கும், இனிய குணங்களுக்கு கடல் போன்றிருக்கும் ரதிக்கும், தாமரையை இருப்பிடமாஸகக் கொண்ட சக்திக்கும், புருஷோத்தமன் ப்ரியையான புஷ்டிக்கும் நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
✨
12.நமோஸ்து நாலீக நிபாநநாயை
நமோஸ்து துக்தோததி ஜன்மபூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை:
✨
பாக்கியம் நல்கும் திருமுகம் கொண்டவளே! பாற்கடலில் உதித்தவளே! மங்களங்களை சேர்க்கும் சந்திரனை உடன் பிறப்பாய் பெற்றவளே! பாற்கடலில் யோகநித்திரையில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அன்பிற்குரிய நாயகியே உன் பாதம் சரணம் எனப் பணிந்தேன்.
✨
13.நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
நமோஸ்து பூமண்டல நாயிகாயை
நமோஸ்து தேவாதிதயா பராயை
நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை:
✨
தங்கத் தாமரை ஆசனத்தில் அமர்ந்தவளே ! தரணிக்கே தாயாகத் திகழ்பவளே! முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு கருணை வெள்ளத்தைப் பொழிபவளே! பெருமை மிக்க சாரங்கபாணியின் மனையாளே சரணம்.
✨
14.நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தநாயை
நமோஸ்து விஷ்ணோ ருர ஸிஸ்திதாயை
நமோஸ்து லஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதர வல்லபாயை:
✨
பிருகு முனியின் திருமகளே சரணம்! ஸ்ரீ மகா விஷ்ணுவின் மார்பில் உறைபவளே சரணம்! தங்கத் தாமரை ஆசனத்தில் உறைபவளே சரணம்! தாமோதரனின் மனம் கவர்ந்தவளே சரணம் !
✨
15.நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை
நமோஸ்து தேவாதி பிரர்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை:
✨
ஜோதி வடிவாகத் திகழ்பவளே! தாமரை போன்ற கண்கள் உடையவளே! சகல ஐஸ்வர்யங்கள், எல்லாவித செல்வங்கள் ஆகியவற்றின் இருப்பிடமாகவும், எல்லா உலகங்களையும் படைத்தவளாகிய ஸ்ரீலட்சுமிதேவியே உனக்கு நமஸ்காரம்.
✨
16.ஸம்பத் கராணி ஸகலேந்த்ரிய நந்தநானி
ஸாம்ராஜ்யதான விபவாநி ஸரோருஹாக்ஷி
த்வத் வந்தநானி துரிதோத் ஹரணோத்யதானி
மாமேவ மாதரநிசம் கலயந்து மான்யே:
✨
எல்லாவகைச் செல்வங்களைத் தரக்கூடியவளும், உலகத்து உயிரினங்கள் அனைத்திற்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடியவளும், பக்தர்களாகிய அடியார்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தருபவளுமாகிய ஸ்ரீமஹாலட்சுமியாகிய உன்னை வணங்குகிறேன்.
✨
17.யத்கடாட்ச ஸமுபாஸனாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத:
ஸந்தனோதி வசனாங்க மானஸை:
த்வாம் முராரி ஹ்ருத யேஸ்வரீம்பஜே:
✨
உந்தன் கடைக் கண் பார்வை வேண்டி நித்தமும் உன்னை தொழுது பூஜை புரிபவர்க்கு தங்கு தடையில்லாமல் செல்வ வளம் தருபவளே! மடை திறந்த வெள்ளமென பெருகும் வகையில் நல்வரங்களை நல்கும் முராரியின் இதயம் கவர்ந்த நாயகியே| தன்னை வழிபடும் பக்தர்கள் மீது கடைக்கண் பார்வையால் கருணையை பொழிந்து அவர்களுக்கு எல்லாவித செல்வங்களையும் அள்ளித் தருகிற ஸ்ரீலட்சுமிதேவியை மிகவும் அடிபணிந்து வணங்குகிறேன்.
✨
18.ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே
தவல தமாம்சுக கந்த மால்ய சோபே|
பகவதி ஹரிவல்லபே மநோஜ்ஞே
த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்(2)
✨
தாமரை மலரில் அமர்ந்தவளே! தாமரை போன்ற கரம் உடையவளே! சந்தன மாலையை அணிந்து ஜோதியாக திகழ்பவளே! சகல உலகங்களுக்கும் செல்வங்களை அளவின்றிக் கொடுப்பவளும், ஸ்ரீமந்நாராயணனின் அன்புக்குரிய நாயகியாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை அடிபணிந்து வணங்குகிறேன்.
✨
19.திக்தஸ்திபி கனக கும்ப முகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாகினி விமலசாரு ஜலப்லு தாங்கீம்|
ப்ராதர் நமாமி ஜகதாம் ஜனனீம் அசேஷ
லோகாதி நாத க்ரு ஹிணீம் அம்ருதாப்தி புத்ரீம்:
✨
யானைகள் தங்கக் குடத்தில் உய்ய நீராட்டும் உடலை உடைய தெய்வத் தாயே! திருமாலின் திருமார்பில் திகழ்பவளே! பாற்கடலை தேவர்கள் கடைந்த போது கிடைத்தற்கரிய அமிர்தம் உண்டாகியது. அந்தப் பெருமை பொருந்திய பாற்கடலின் செல்வியே!உலகத்திற்கெல்லாம் நாயகனான ஸ்ரீமஹாவிஷ்ணுவின் நாயகியுமான ஸ்ரீலட்சுமிதேவியே! உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.
✨
20.கமலே கமலாட்ச வல்லபேத்வம்
கருணாபூர தரங்கிதைர பாங்கை:
அவலோகய மாம் அகிஞ்சனானாம்
ப்ரதமம் பாத்ரம் அக்ருத்ரிமம் தயாயா:
✨
தாமரை மலரில் இருப்பவளே! கமலக் கண்ணனாம் ஸ்ரீ விஷ்ணுவின் காதலியே! கருணை வெள்ளமே! உன் கடைக் கண் பார்வை வேண்டி உன்னை துதிக்கும் இந்த வறியவனின் பிழை பொறுத்து தரித்திரத்தை நீக்க வழியைக் காட்டியருள வேண்டும்.
✨
21.ஸ்துவந்தியே ஸ்துதி பிரமூபிர ந்வகம்
த்ரயீமயீம் த்ரி புவன மாதரம் ரமாம்
குணாதிகா குருதர பாக்ய பாகின:
பவந்தி தே புவி புத பாவிதாசயா:
✨
மறைகள் மூன்றின் வடிவமாகவும், மூவுலகம் தொழும் தேவியாகவும் திகழும் ஸ்ரீ மஹாலட்சுமியே உன்னை மேற் கூறிய ‘கனகதாரா ஸ்தோத்திரத்தினால் துதித்துப் போற்றுவோருக்கு நிறை செல்வம், கீர்த்தி, ஆரோக்கியம், நிறை ஆயுள், புத்தி, மற்றும் வாழ்வில் எல்லா ஐஸ்வர்யர்களையும் அளித்து பூரண நலமும் அளிப்பாய் தாயே.
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக