அம்மாவின் வடிவாக அருளும் ஸ்ரீ சாயி ✨
✨✨✨✨✨✨✨✨✨
ஆல்பம்:சாய் நாமமே மந்திரம்
பாடியவர்:ஸ்ரீஹரி
வரிகள்:கணேஷ் சுந்தரேசன்
இசை:வீரமணி கண்ணன்
✨✨✨✨✨✨✨✨✨
அம்மாவின் வடிவாக அருளும் ஸ்ரீ சாயி
✨
கருவாக்கி வைத்து என்னை தாங்கிய
ஸ்ரீ சாய்
✨
உயிராய் உணர்வாய் எனை உன்னுள் நிறைவாய் (2)
✨
உடலும் மனமும் அறிவும் தந்த சீரடி சாயி (2)
✨
சரணம் சரணம் சீரடி சாயி
அபயம் அபயம் துவாரகாமாயி (2)(அம்மாவின்)
✨
கர்மவினை தொடர்ந்ததனால்
ஜனன பந்தம் தந்து
உன் கருவறையில் வைத்தவனே
ஸ்ரீ குரு சாயி (2)
✨
அம்மா உன் மடி மீது நாள்தோறுமே
நான் கண்ட பேரின்பம் இது போதுமே(2)
✨
ஆயிரம் ஜென்மத்து வாசனை விட்டேன்
பூரணம் தரும் சாய்
✨
அரவணைத்து அருள வேண்டும்
ஸ்ரீ குரு சாய்
அரவணைத்து அருள வேண்டும்
சீரடி சாய்
✨
சரணம் சரணம் சீரடி சாயி
அபயம் அபயம் துவாரகாமாயி (2)(அம்மாவின்)
✨
எங்கிருந்தோ என்னை எடுத்து உயிரமுதம் ஊட்டி
உன் கருணை என்னும் பால் கொடுத்த தாயே குருநாதா(2)
✨
அம்மா உன் மகனுக்கு எது வேண்டுமோ அந்தந்த காலத்தில் தந்தாயே நீ (2)
✨
காத்திடும் அம்மா காலடி கிடந்தேன்
ஆனந்தம் இது சாயி
✨
மகனெனக்கு போதும் இந்த பேரருள் சாய்
✨
உன் மகனெனக்கு போதும் இந்த பேரருள் சாய்
✨
சரணம் சரணம் சீரடி சாயி
அபயம் அபயம் துவாரகாமாயி(2)
(அம்மாவின்)
✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக