போகும் பாதைகளும் வாழ்வின் தேவைகளும்
✨✨✨✨✨✨✨✨✨
படம்: நெற்றிக்கண்
ஆண்டு:2021
பாடகர்கள் : பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் அம்ரித் ராம்நாத்
இசை : கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
வரிகள்:கார்த்திக் நேதா
✨✨✨✨✨✨✨✨✨
இருவர் : போகும் பாதைகளும் வாழ்வின் தேவைகளும்
படிப்பினை கொடுத்திடுமே
முடியாத கேள்விகளும் ஆழ தேடல்களும்
வழிகளை அமைத்திடுமே
✨
பெண் : மழை காற்றோடு ஓடி சென்று நிலம் சேருமே
குழு : நிலம் சேருமே
✨
பெண் : அது ஏதோ ஓர் சாயல் கொண்டு உயிர் வாழுமே
குழு : உயிர் வாழுமே
✨
பெண் : சுடரி சுடரி வலிகள் நீதானே
ஒளியாய் மிளிரும் வெளியும் நீதானே
விளக்கால் மலர் தான் அடி பூக்காதே
கிழக்காய் இருந்தால் இருள் சேராதே
✨
பெண் : இதுவும் கடந்து போகும் …(2)
✨
பெண் : உன்னை நீ ரசித்தால்
முழுதாய் வசித்தால்
இதம் தான் இந்த தனிமையே
துயரில் சிரித்தால் இடரை எரித்தால்
கணமும் ஒரு முழுமையே
✨
பெண் : சோகத்தால் எது தான் மாறிடும்
கண்ணீர் விட்டால் செடியாய் பூத்திடும்
என்னாகும் வா வாழ்ந்தே பார்த்திடலாம்
✨
பெண் : தினம் நீ தேடும் வாழ்க்கை
எங்கோ உன்னை தேடுமே
அது உனக்கான காலம் வந்தால்
உன்னை சேருமே
✨
பெண் : சுடரி சுடரி முரண்கள் மாறாதே
மனம் தான் தெளிந்தால் மயக்கம் நேராதே
அழகே சுடரி அடி ஏங்காதே
பரிவின் தினவை வலி தாங்காதே
✨
பெண் : இதுவும் கடந்து போகும்….(5)
✨
பெண் : கடந்து போகும் …(5)
கடந்து…போகும் ..
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக