புவனேஸ்வரி அருள்புரி ஆதரி சிவசங்கரி தாயே நீயே துணை ✨

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:தாயே நீயே துணை

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை: ரவீந்தரன் 

பாடலாசிரியர் : வாலி

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : புவனேஸ்வரி அருள்புரி ஆதரி

சிவசங்கரி தாயே நீயே துணை

பனிவரைத் தோன்றிய சூலினி மாலினி

ஜனனி ஜெகன்மோகினி

மாதவன் ஸ்ரீதரன் சோதரியே

ஆண் : ஸ்ரீபுவனேஸ்வரி அருள்புரி ஆதரி

சிவசங்கரி தாயே நீயே துணை…

ஆண் : வாயில்லாத பிள்ளை

விழியில்லாத கிள்ளை

நோயைத் தீர்க்க வருக ஆ….ஆ….ஆ….ஆ….

பெண் : பாவமோ வினையின் தாபமோ

உனது கோபமோ விளைந்த சாபமோ கருணை

வாசல் தேடிவந்து வாடும் நெஞ்சம் ரெண்டு

வேண்டும் வாழ்வை தருக ஆ…..ஆ….

ஆண் : நாளெல்லாம் உனது பூஜைதான்

எனது நாவெல்லாம் உனது பாடல்தான்

விழியில் வழியும் புனலில்

உந்தன் திருவடி நனையட்டும்

பெண் : நனைந்த பிறகு உந்தன்

திருவுளம் கனியட்டும்

ஆண் : கனிந்த கனிவில் உந்தன்

கடைக் கண்கள் ஒளிரட்டும்

பெண் : இருண்டு கிடக்கும் எங்கள்

பொழுதுகள் புலரட்டும்

ஆண் : மடியில் தவழும் கொடியின்

முகமும் சிரித்திட

உனதருள் கிடைத்திடுமா…….ஆ….

குழு : தாயே…ஏ…. நீயே..ஏ… துணை……

பெண் : ஸ்ரீபுவனேஸ்வரி அருள்புரி ஆதரி

சிவசங்கரி தாயே நீயே துணை…

குழு : ஆ….ஆ….ஆ….ஆ….ஆ….

பெண் : வேம்பு போல நின்று பாம்பு போல வந்து

ஊரைக் காக்கும் உமையே……ஏ…

ஆண் : மாரியே அமுத வாரியே

தளங்கள் மாறியே விளங்கும் தேவியே

ஆண் : உலகில் நீ இல்லாமல் ஒன்று

நேர்வதேது இங்கு ஊணிலாடும் உயிரே…..ஏ…

பெண் : ஆதியே பரமன் பாதியே

புவியின் ஜோதியே வழங்கு நீதியே

பெண் : தினமும் சரணம் சரணம்

என்று தொழுதிட அழுதிட

ஆண் : மனமும் உடலும் இங்கு மெழுகென உருகிட

பெண் : தருணம் தருணமிது தனயனுக்குதவிட

ஆண் : தவறை மறந்து இங்கு தரிசனம் கொடுத்திடு

பெண் : வினையும் விதியும் விலகும்

வழியும் திறந்திடு விழிமலர் திறந்திடம்மா….ஆ…..

குழு : தாயே நீயே துணை…

ஆண் : புவனேஸ்வரி அருள்புரி ஆதரி

சிவசங்கரி தாயே நீயே துணை

பனிவரைத் தோன்றிய சூலினி மாலினி

ஜனனி ஜெகன்மோகினி

மாதவன் ஸ்ரீதரன் சோதரியே

இருவர் : ஸ்ரீபுவனேஸ்வரி அருள்புரி ஆதரி

சிவசங்கரி தாயே நீயே துணை….

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்