சரவணபவ என்னும் திருமந்திரம்
✨✨✨✨✨✨✨✨✨
சரவணபவ என்னும் திருமந்திரம்
பாடியவர்: சுதா ரகுநாதன்
வரிகள்: பாபநாசம் சிவன்
✨✨✨✨✨✨✨✨✨
பல்லவி
✨
சரவணபவ என்னும் திருமந்திரம் தனை சதா ஜபி (ஓம்) என் நாவே (சரவணபவ)
✨
அனுபல்லவி
✨
புரமெரித்த பரமன் நெற்றிக்கண்ணில் உதித்த
போதஸ்வருபன் பொற்பாதம்தனைப் பணிந்து (சரவணபவ)
✨
சரணம்
✨
மண்மிசை கிடந்துழல் பிறவிப் பிணியைத் தீர்க்கும்
மாயை அகலப் பேரின்ப நெறியில் சேர்க்கும் தண்மதி நிகர் குளிர் கருணை நிலவு மிழும் ஷண்முக ப்ரிய ஷடாக்ஷர பாவன (சரவணபவ)
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக