இவள் யாரோ வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ இவள் யாரோ
✨✨✨✨✨✨✨✨✨
அதிகம் கேட்டிராத பாடல்.
இசைஞானி படைப்பில்,
அருண்மொழி -S.ஜானகி அவர்கள் குரலில்,
கவிஞர் வாலி வரிகளில்
✨✨✨✨✨✨✨✨✨
படம்:ராஜாவின் பார்வையிலே
ஆண்டு:1995
பாடகர்கள் :
அருண் மொழி மற்றும் எஸ். ஜானகி
இசை : இளையராஜா
✨✨✨✨✨✨✨✨✨
ஆண் : இவள் யாரோ
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ
என்னப் பேரோ
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ
✨
பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல
என்றென்றும் வாழும் காதல்
நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல
நெஞ்சுக்குள் ஊறும் பாடல்
✨
ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை
இவள் யாரோ
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ
இவள் யாரோ
✨
ஆண் : காதல் வாழ்வு கானல் என்று
நேற்றுப் பேசினேன்
காதலே தெய்வீகம் என்று
இன்று போற்றினேன்
✨
பெண் : காலை மாலை உன்னை எண்ணி
உள்ளம் வாடினேன்
ஆசைகள் கை கூடும்
இந்த நாளை வாழ்த்தினேன்
✨
ஆண் : கண்ணே பசும் பொன்னே
பெண் : ஹ்ம்ம் ம்ம்…..
ஆண் : வந்தேன் உந்தன் பின்னே
✨
பெண் : கண்ணா மணிவண்ணா
உன் பேர் தினம் சொன்னேன்
உனைக் கண்டேன் கனிந்தேன்
✨
ஆண் : இவள் யாரோ
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ
என்னப் பேரோ
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ
✨
பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல
என்றென்றும் வாழும் காதல்
✨
ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை
ஆண் : இவள் யாரோ
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ
✨
பெண் : தேவன் உந்தன் தேரும் எந்தன்
வாசல் வந்ததே
தேவியை கையோடு அள்ளி சொந்தம் கொண்டதே
✨
ஆண் : நேரம் காலம் கூடும் போது
நேசம் வென்றதே
நாயகி உன் தோற்றம் இந்த நெஞ்சில் நின்றதே
✨
பெண் : இன்பம் இந்த இன்பம் இன்னும் பல ஜென்மம்
✨
ஆண் : பொங்கும் இனி பொங்கும் செந்தேன் இதழ் எங்கும்
அதில் என்னை இழந்தேன்
✨
ஆண் : இவள் யாரோ
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ
என்னப் பேரோ
வாய் விட்டுத் தேன் சிந்தப் பாடும் குயிலோ
✨
பெண் : நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல
என்றென்றும் வாழும் காதல்
நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல
நெஞ்சுக்குள் ஊறும் பாடல்
✨
ஆண் : அடடா அதில் நான் மறந்தேன் என்னை
✨
ஆண் : இவள் யாரோ
வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ
இவள் யாரோ
✨✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக