நினைத்தது யாரோ நீதானே தினம் உன்னை பாட நான்தானே

 ✨✨✨✨✨✨✨✨

படம்: பாட்டுக்கொரு தலைவன்

ஆண்டு:1989

பாடகர்கள் : மனோ மற்றும் ஜிக்கி

இசை  : இளையராஜா

வரிகள்:கங்கை அமரன்

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : நினைத்தது யாரோ நீதானே

தினம் உன்னை பாட நான்தானே

நினைத்தது யாரோ நீதானே

தினம் உன்னை பாட நான்தானே

நீதானே என் கோயில்

உன் நாதம் என் நாவில்

ஊர்வலம் போவோம் பூந்தேரில்

பெண் : நினைத்தது யாரோ நீதானே

தினம் உன்னை பாட நான்தானே

ஆண் : மனதில் ஒன்று விழுந்ததம்மா

விழுந்தது பூவாய் எழுந்ததம்மா

கனவில் ஒன்று தெரிந்ததம்மா

கைகளில் வந்தேன் புரிந்ததம்மா

ஆண் : நானறியாத உலகினை பார்த்தேன்

நான் தெரியாத உறவினில் சேர்ந்தேன்

எனக்கோர் கீதை உன் மனமே

படிப்பேன் நானும் தினம் தினமே

பரவசமானேன் அன்பே………

பெண் : நினைத்தது யாரோ நீதானே

தினம் உன்னை பாட நான்தானே

பெண் : பூவெடுத்தேன் நான் தொடுத்தேன்

பூஜையின் நேரம் நான் கொடுத்தேன்

காலமெல்லாம் காத்திருப்பேன்

கண்ணனை தேடி சேர்ந்திருப்பேன்

பெண் : பூவிழி மூட முடியவும் இல்லை

மூடிய போது விடியவும் இல்லை

கடலை தேடும் காவிரிப்போல்

கலந்திடவேண்டும் உன் மடிமேல்

இது புது சொந்தம் அன்பே

ஆண் : நினைத்தது யாரோ நீதானே

தினம் உன்னை பாட நான்தானே

நினைத்தது யாரோ நீதானே

தினம் உன்னை பாட நான்தானே

நீதானே என் கோயில்

உன் நாதம் என் நாவில்

ஊர்வலம் போவோம் பூந்தேரில்

பெண் : நினைத்தது யாரோ நீதானே

தினம் உன்னை பாட நான்தானே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்