ஆனந்த ரோஜா பூக்களை பாரு நம் வீட்டு வாசலில்
✨✨✨✨✨✨✨✨✨
படம்:குபேரன்
ஆண்டு:2000
இசை:S.A.ராஜ்குமார்
பாடியவர்கள்:
உன்னி கிருஷ்ணன்
சுஜாதா மோகன்
✨✨✨✨✨✨✨✨✨
ஆனந்த ரோஜா பூக்களை பாரு நம் வீட்டு வாசலில்
ஆரம்பம் ஆச்சு சந்தோஷ கீதம் நெஞ்செங்கும் வானவில்
✨
எங்கள் வானில் புதிதாய் ரெண்டு நிலவு தோன்றும் நேரம்
✨
மழலை பேச்சை கேட்டால் போதும் வாழ்க்கை இன்பம் ஆகும்
✨
அழகு திருக்கோயில் மணி போல ஒலி கேட்கும் நமது வீட்டில்
✨
மதுரை நகர் கண்ட தமிழ் கூட
இங்கு மயங்கும் நமது பாட்டில்
✨
ஆனந்த ரோஜா பூக்களை பாரு நம் வீட்டு வாசலில்
ஆரம்பம் ஆச்சு சந்தோஷ கீதம் நெஞ்செங்கும் வானவில்
✨
முல்லை மலர் சிரிப்போடு
முத்தம் தர சீக்கிரம்
கண்ணன் வந்து பிறப்பானே
எங்கள் வீடு கோகுலம்
✨
இமை போல காக்கும் உந்தன் அருகினிலே
நிழலாக வாழ்ந்தால் போதும் உலகினிலே
✨
சந்தோஷ பூங்காற்று
நம் வாழ்வில் ஓயாது
மதுரை மீனாட்சி திருக்கோலம்
தந்தை உன்னில் பார்த்தேன்
மனதை தாலாட்டும் சங்கீதம்
உந்தன் பேச்சில் கேட்டேன்
✨
ஆனந்த ரோஜா பூக்களை பாரு நம் வீட்டு வாசலில்
ஆரம்பம் ஆச்சு சந்தோஷ கீதம் நெஞ்செங்கும் வானவில்
✨
புத்தம் புது முகம் காண
பத்துத் திங்கள் காத்திரு
தத்தை மொழி சிரிப்போடு
முத்தம் தர கேட்டிடு
தாய் மாமன் மார்பை முட்டும் கால்கள் எங்கே
தங்க காப்பு செய்து
வைத்தேன் என் விழியே
✨
மலையோர பூங்காற்று போல் உந்தன் தாலாட்டு
வானம் கைகள் தொடும் தூரம் தான் நட்சத்திரங்கள் மறைப்போம்
✨
வாழ்க்கை என்பதொரு கார்காலம்
சொட்ட சொட்ட நனைவோம்
✨
ஆனந்த ரோஜா பூக்களை பாரு நம் வீட்டு வாசலில்
ஆரம்பம் ஆச்சு சந்தோஷ கீதம் நெஞ்செங்கும் வானவில்
✨
எங்கள் வானில் புதிதாய் ரெண்டு நிலவு தோன்றும் நேரம்
✨
மழலை பேச்சை கேட்டால் போதும் வாழ்க்கை இன்பம் ஆகும்
✨
அழகு திருக்கோயில் மணி போல ஒலி கேட்கும் நமது வீட்டில்
✨
மதுரை நகர் கண்ட தமிழ் கூட
இங்கு மயங்கும் நமது பாட்டில்
✨✨✨✨✨✨✨✨
கருத்துகள்
கருத்துரையிடுக